districts

img

நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்றிடுக அனைத்து வங்கி ஊழியர் சங்க கூட்டமைப்பினர் ஆவேசம்

கோவை, ஜூன் 16– நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள கோரிக்கைகளை பேச்சு வார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி கோவையில் அனைத்து வங்கி ஊழி யர் சங்க கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  வங்கிகளில் உள்ள காலிப்பணி யிடங்களை உடனடியாக நிரப்ப  வேண்டும். பொதுத்துறை வங்கி களை தனியார்மயப்படுத்தக் கூடாது. சிஎஸ்பி, எல்விபி வங்கிக ளில் 11 ஆவது ஊதிய ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும். புதிய ஓய் வூதியத் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். வாரத்தில் 5 நாட்கள் வேலை வழங்க வேண்டும். நீண்ட நாட்களாக நிலு வையில் உள்ள கோரிக்கைகளை ஒன்றிய அரசு மற்றும் வங்கி நிர்வா கங்கள் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டும் என்பன உள் ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி கோவை ரயில் நிலையம் அரு கேயுள்ள பாரத ஸ்டேட் வங்கியின்  பிரதான அலுவலகம் முன்பு அனைத்து வங்கி ஊழியர் சங்கங்க ளின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றுது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளன மாவட்ட தலைவர் ராஜன் தலைமை வகித்தார். இதில், அகில இந்திய அதிகாரிகள் சங்க மாவட்ட செயலா ளர் ராஜவேலு, வங்கி ஊழியர் கூட்ட மைப்பின் தலைவர் சையது, இந்தி யன் வங்கி ஊழியர் சங்கத்தின் செய லாளர் மகேஷ்வரன்  உள்ளிட்ட வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் திர ளானோர் பங்கேற்றனர்.