பொள்ளாச்சி, டிச.15- மத்திய அரசின் புதிய குடியுரிமை சட்டத்தைக் கண் டித்து பொள்ளாச்சி சார் ஆட் சியர் அலுவலகத்தை முற்று கையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக இளைஞரணி யினர் கைது செய்யப்பட்ட னர். மத்திய பாஜக அரசால் நிறைவேற்றப் பட்ட புதிய குடியுரிமை சட்டத்தினை கண் டித்து கோவை மாவட்டம், பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு சனியன்று திமுக இளைஞரணியினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட் டத்திற்கு கோவை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயன் தலைமை வகித்தார். இதில் புதிய குடியுரிமை சட்டத்தின் நகலைக் கிழித்து எரிந்து மத்திய பா.ஜ.க அரசுக்கு எதி ராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இரா.நவ நீதகிருஷ்ணன் உள்ளிட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.