tamilnadu

img

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம்

குடவாசல், ஜன.18- திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் பூந்தோட்டத்தில் குடி யுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் ஒன்று திரண்டு போராட்டம், பேரணி நடத்தினர். பேரணியில் மதச்சார்பற்ற கூட்டணியின் அனைத்து கட்சியினரும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். நன்னிலம் வட்டத்தில் உள்ள பூந்தோட்டம் பள்ளிவாசலில் இருந்து அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பாக பேரணியாக வந்து பள்ளி வாசல் அருகே அமைக்கப்பட்ட மேடை யில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கோஷமிட்டு கருப்புச் சட்டங்களை வாபஸ் பெறக் கோரி முழக்கமிட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன், குடியுரிமை சட்டத்தில் உள்ள ஆபத்தை விளக்கி உரை யாற்றினார்.  சிபிஎம் மாவட்ட கவுன்சிலர் ஐ.முக மது உதுமான், வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.முகமது சலாவு தின், மாவட்ட குழு உறுப்பினர் சரவண. சதீஷ் மற்றும் இஸ்லாமிய சகோதரரு டன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர், திராவிட முன்னேற்ற கழகம், விடுதலை சிறுத்தையினர், காங்கிரஸ் கட்சியினர் என மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக ஆயி ரக்கணக்கானோர் பேரணியில் கலந்து கொண்டனர்.