கடலூர், ஜன.13- மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடி யுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழக மக்கள் ஒற்றுமை மேடை யின் சார்பில் கடலூர் தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பாளர் கோ.மாதவன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் அப்துல் சமது, மாவட்டச் செயலாளர் சேக்தாவூத், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன், திமுக நகரச் செயலாளர் கே.எஸ்.ராஜா, காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய கமிட்டி உறுப்பினர் வழக்கறிஞர் ஏ.எஸ்.சந்திரசேகரன், திராவிட கழக பொதுச் செயலாளர் துரை.சந்திர சேகரன், மாவட்டத் தலைவர் சிவக்குமார், விசிக மாவட்டச் செயலாளர் ச.முல்லை வேந்தன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் குளோப், தமிழக வாழ்வுரிமைக் கட்சி இளைஞரணி தலைவர் செந்தில் பாபு, மதிமுக செயலாளர் ராமசாமி, மாவட்டப் பொருளாளர் மதன், இந்திய யூனி யன் முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் ராஜா ரஹிமுல்லா, குடியிருப்போர் நலச்சங்க பொதுச்செயலாளர் எம்.மருதவாணன், தலைவர் பி.வெங்கடேசன் உள்ளிட்டோர் பேசினர். முன்னதாக நகர அமைப்பாளர் ஆர். அமர்நாத் வரவேற்றார். பால்கி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.