districts

img

ஐசிஎப் அனைத்து சங்க போராட்டக்குழு சார்பில் பொது மேலாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்

109 லாபம் ஈட்டும் வழித்தடங்களில் 224 ரயில்களை இயக்க தனியார் கார்பரேட் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ள மத்திய அரசை கண்டித்து வெள்ளியன்று (ஜூலை 24) ஐசிஎப் அனைத்து சங்க போராட்டக்குழு சார்பில் பொது மேலாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஐசிஎப் யுனைட்டெட் ஒர்க்கர்ஸ் யூனியன் (சிஐடியு) தலைவர் எஸ்.இராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பி.மோகன்தாஸ் (ஏஐஆர்எப்), டி.எம். செந்தில் குமார் (ஐஎன்டியுசி), பா.ராஜாராமன் (சிஐடியு), சுந்தர் (பிஎஎஸ்), ராஜேந்திரன் (ஏஐடியுசி), கோபிநாத் (ஐஆர்டிஎஸ்ஏ), ராமமூர்த்தி (ஏஐஒபிசி), சாந்தகுமார் (ஏஐஎஸ்சிஎஸ்டி) உள்ளிட்டோர் பேசினர்.