districts

img

அகர ஒரத்தூர் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் கோரி ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம், நவ.10- நாகை வட்டம் அகரஒரத்தூர் ஊராட்சிப் பகுதிகளில் அடிப்படை வசதிகளைச் செய்து தருமாறு பொதுமக்கள் கோரி வருகிறார்கள். ஆனால், அதிகாரிகள் எதனையும் கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை. இந்த அலட்சியப் போக்கைக் கண்டித்தும், உடனடியாக அடிப்படை வசதிகள் செய்து தருமாறும் கோரி, அகர ஒரத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. அகரஒரத்தூரில் உள்ள 1000 அடி ஆழ்துளைக் கிணற்றிலிலிருந்து தண்ணீர் எடுத்து, வீடுகளுக்கு இணைப்பின் மூலம் நீர் வழங்க வேண்டும். இடியும் நிலையில் உள்ள மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியை இடித்து விட்டுப் புதிய நீர்த் தேக்கத் தொட்டியை உட னடியாகக் கட்ட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்கக் கிளைச் செயலாளர் என்.பிரபாகரன் தலைமை வகித்தார். சங்கத்தின் கிளைத் தலைவர் எஸ்.மதிவாணன், சி.அகிலன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். வாலிபர் சங்க நாகை ஒன்றியத் தலைவர் பி.எம்.நன்மாறன் ஆர்ப்பாட்டத்தைத் துவக்கி வைத்து உரை யாற்றினார்.  மாவட்டத் தலைவர் ஏ.சிவகுமார், நாகை ஒன்றியச் செயலாளர் என்.வடிவேல், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.மாலா, ஜி. சிந்தன், ஒன்றியக்குழு நிர்வாகிகள் எஸ்.வி. நன்மாறன், வி.பாரதி, பி.ராஜா, எம்.சுரேஷ், ஆர்.ரஞ்சித், எஸ்.மதியழகன், ஏ.புருஷோத்த மன், டி.கல்யாணசுந்தரம், ஊராட்சிமன்ற முன்னாள் தலைவர் வி.சுந்தரராஜன், வி.தொ.ச. ஒன்றியத் தலைவர் வி.ராதா ஆகியோர் போராட்டத்தை வாழ்த்திப் பேசினர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செய லாளர் ஏ.வி.சிங்காரவேலன், கோரிக்கை களை விளக்கி நிறைவுரையாற்றினார். ஒன்றி யக்குழு உறுப்பினர் கே.அருள்தாஸ் நன்றி கூறி னார்.