திருப்பூர், ஜூலை 27 - திருப்பூர் தெற்கு மாநகரம் கருவம்பாளையம் பகுதி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளைகள் இணைந்து, மணிப்பூ ரில் நடைபெற்ற கலவரத்தை கண்டித்தும், அதைக் கட்டுப்ப டுத்தத் தவறிய பாரதிய ஜனதா அரசுகளைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு ஆட்டோ சங்கத்தின் மாவட்ட செயலாளர் சிவராமன் தலைமை ஏற்றார். கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.சுந்தரம், மாதர் சங்க தெற்கு மாநகர செயலாளர் சி.பானுமதி, கட்சியின் தெற்கு மாநகரக் குழு உறுப்பினர் பா.ஞானசேகர் ஆகியோர் கண்டன உரை யாற்றினர். இதில் திரளானோர் கலந்து கொண்டனர். முடிவில் கருவம்பாளையம் கிளை செயலாளர் ஜி.சுரேஷ்குமார் நன்றி கூறினார்.