சிபிஎம் அகில இந்திய மாநாடு பிரச்சாரம்
விடுதலைப் போராட்ட மாவீரர்கள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு தூக்கிலிடப்பட்ட தினமான ஞாயிறன்று (மார்ச் 23) தி.நகர் பகுதி முழுவதும் சிபிஎம் 24வது அகில இந்திய மாநாட்டு பிரச்சாரம் நடைபெற்றது. கிளைகள் தோறும் கொடியேற்றி, பிரச்சாரம் செய்யும் இந்த இயக்கத்தை கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், சிஐடி நகர் ரவுண்டானாவில் கொடியேற்றி தொடங்கி வைத்தார். கிளைச்செயலாளர் சுப்பிரமணி தலைமையில் பகுதிச் செயலாளர் எம்.குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மக்களுக்கு மோர் வழங்கி பிரச்சாரம்
சிபிஎம் 24வது அகில இந்திய மாநாட்டையொட்டி தி.நகர் பகுதி, 131வது வட்ட கிளை சார்பில் ஞாயிறன்று (மார்ச் 23) பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக நல்லாங்குப்பம் பகுதி, 10வது நிழற்சாலையில் மக்களுக்கு மோர் வழங்கி பிரச்சாரத்தை கட்சியின் தென்சென்னை மாவட்ட செயலாளர் ஆர்.வேல்முருகன் தொடங்கி வைத்தார்.
அரசுப் பள்ளியின் 90 ஆம் ஆண்டு விழா
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம்,அச்சிறுபாக்கம் ஒன்றியம் ,காட்டுக்கரணை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் 90 ஆம் ஆண்டு நிறைவு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. விழாவில் தலைமை ஆசிரியை சா.பிச்சையம்மாளிடம் புரவலர்களும் நன்கொடையாளர்களும் பரிசுப் பொருட்களை சீர் வரிசையாக எடுத்து வந்து அளித்தனர். ஊராட்சி மன்றத் தலைவர் ஜெ.தர்மராஜ், புரவலர் சந்திரசேகர், பிரபு மற்றும் பலர் பரிசுப் பொருட்கள் வழங்க முன்னாள் மாணவர்கள் பள்ளிக்கு தேவையான பொருட்களை வழங்கினர் .