districts

img

13 மையங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை: முன்னேற்பாடுகள், பாதுகாப்பு பற்றி ஆலோசனை

திருப்பூர், டிச. 31 – திருப்பூர் மாவட்டத்தில் 13 மையங்களில் ஜனவரி 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆலோ சனைக் கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் செவ் வாயன்று ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குகள் எண்ணிக் கையின்போது மேற்கொள்ளப் பட வேண்டிய பணிகள் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்க ளுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர், மாவட்ட தேர்தல் அலுவலர் க.விஜயகார்த் திகேயன் தலைமையில் நடை பெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர், அவினாசி, பல்லடம், பொங்கலூர், ஊத்துக்குளி, தாராபுரம், குடிமங்கலம், காங்க யம், குண்டடம், மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை, வெள்ளக் கோவில் மற்றும் மூலனூர் ஆகிய 13 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊரகப் பகுதிகளில் இரு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் 1704 வாக்குச் சாவடிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி 13 மையங்களில் வியாழனன்று (ஜன.2) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இம்மையங் களில் நான்கு வாக்குச்சீட்டுகளை வகை பிரித்தலுக்காக 41 அறை களில் 82 கேமராக்களும்,  வாக்கு எண்ணுகைக்காக, நான்கு தேர் தல்களுக்கும் 132 அறைகளில் 264 கேமராக்களும் பொருத்தப் பட்டுள்ளன. மேலும் வாக்குச் சீட்டுகள் வகைப் பிரித்தலுக்காக 419 மேஜைகளும், வாக்கு எண்ணிக்கைக்காக நான்கு தேர் தல்களுக்கும் 877 மேஜைகளும் அமைக்கப்பட்டுள்ளன. வகைப் பிரித்தல் மற்றும் வாக்கு எண் ணிக்கை பணியில் 4627 அலு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள் ளனர்.

13 வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் ஜெனரேட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், வாக்கு பெட்டியிலுள்ள நான்கு தேர்தல்களுக்கான நான்கு வகை வாக்குச்சீட்டுகளும் வகை பிரிக் கப்பட்டு, அந்தந்த தேர்தல்க ளுக்கான வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு செல்லப் படும். எந்த ஊராட்சி மற்றும் வார்டின் வாக்குகள் வகை பிரிக்கப்படுகிறது மற்றும் எண் ணப்படுகிறது என்ற விவரத்தை யும், வெற்றி பெற்றவர்கள் விவ ரத்தையும் அறிவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு சான் றும், முதல் கூட்டத்திற்கான அழைப்புக்கடிதம் மற்றும் மறைமுகத் தேர்தல்களுக்கான அறிவிப்பு கடிதம் ஆகியவை அன்றே வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேட்பா ளர்கள் பெற்ற ஓட்டுகள் விவரம் மற்றும் வெற்றி பெற்றவர்கள் விவரம் ஆகியவற்றை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்திட துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை  மையத்தில் உரிய தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு காவல் துறை மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

குடிநீர் வசதி போன்ற அடிப் படை வசதிகள் வாக்கு எண் ணிக்கை மையத்தில்  ஏற்படுத்தப் பட்டு உள்ளது. வாக்கு எண்ணுகை யின்போது தேர்தல் விதிகளின்படி வாக்கு எண்ணுகை முகவர்களும், வேட்பாளர்களுக்காக நியமிக்கப் பட்டுள்ளனர். வேட்பாளர்கள் மற்றும் வாக்கு எண்ணும் முகவர் கள் தங்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடை யாள அட்டையை காண்பித்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர். வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் கைப்பேசி, மைகொண்டு எழுதும் பேனா, தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்ட தமிழ்நாடு மாநில தேர்தல்  ஆணையத்தால் தடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்து வரக்கூடாது. பந்து முனைப் பேனா மற்றும் பென்சில் ஆகியவற்றுக்கு அனுமதி உண்டு. வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஒலி பெருக்கியில் வரிசைக்கிரம மாக அறிவிக்கப்படும் ஊராட்சி யைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் அனைவரும் மிகுந்த விழிப்புணர்வுடன் தங்களது பணியினை மேற்கொள்ள வேண் டும், மாநில தேர்தல் ஆணையத் தின் விதிமுறைகளை வேட்பாளர் கள் மற்றும் முகவர்கள் முழுமை யாக பின்பற்றி மாவட்ட நிர்வாகத் திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கு மாறு மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் இக்கூட்டத்தில் தெரிவித்தார். இக்கூட்டத்தில் உயரதிகாரி கள், தேர்தல் நடத்தும் அலுவலர் கள், தொடர்புடைய அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.