districts

நிதியமைச்சரின் ஆணவத்திற்கு கண்டனம்

நிதியமைச்சரின் ஆணவத்திற்கு கண்டனம்  கோவை, செப்.13- ஜிஎஸ்டி வரிவிதிப்பில் உள்ள நெருக்கடிகள் குறித்து பேசிய அன்னபூர்ணா உணவகத்தின் உரிமையாளரை மன் னிப்பு கேட்க வைத்த ஒன்றிய நிதியமைச்சரின் செயலுக்கு கோவை மாநகராட்சி கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட் டது. கோவை மாநகராட்சி சாதாரண கூட்டம் வெள்ளியன்று நடைபெற்றது. மேயர் ரங்கநாயகி தலைமை வகித்தார். இதில், மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரன், துணை மேயர் ரா.வெற்றிச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்த னர். இதில், மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பி னர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், கோவையில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பங்கேற்ற நிகழ்வும், இதனையொட்டி, அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் சீனிவாசனை மன் னிப்பு கேட்க நிர்பந்தித்த விவகாரம் வெடித்தது. இதில், அன்ன பூர்ணா ஓட்டல் விவகாரத்தில் மத்திய நிதி அமைச்சரின் செயல் பாட்டை கண்டிப்பதாக காங்கிரஸ் கட்சியின் மாமன்ற உறுப்பி னர் நவீன்குமார் பேசினார். அப்போது, கோவையின் அடையா ளமான அன்னபூர்ணா நிறுவனத்தை கேவலப்படுத்துவது, நம் அத்தனை பேரையும் கேவலப்படுத்துவது போன்றது என்றார். அன்னபூர்ணா உரிமையாளரை கூப்பிட்டு மன்னிப்பு கேட்க வைத்து, கூனி குறுக வைத்திருக்கின்றனர். இந்த பாசிச, அராஜக போக்கையும்,ஒன்றிய நிதியமைச்சரின் செயல்பாட்டையும் வன்மையாக கண்டிப்பதாக தெரிவித் தார்.  இதனை சக கவுன்சிலர்கள் மேஜையை தட்டி ஆரவாரம் செய்தனர்.