districts

img

ஊழியர்களை அவமானப்படுத்தும் மருத்துவமனை அதிகாரிகள் மீது ஆட்சியரிடம் புகார்

திருப்பூர், நவ. 4 - திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவம னையில் சில அதிகாரிகள் தேசிய சுகாதார இயக்கம் (என்எச் எம்) பெண் ஊழியர்களை மரியாதைக் குறைவாகவும், அவ மானப்படுத்தும் வகையிலும் செயல்படுவதாக மாவட்ட ஆட் சியரிடம் நேரில் புகார் கூறியுள்ளனர். இது தொடர்பாக திங்களன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர கத்தில், சிஐடியு திருப்பூர் மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ்  உள்பட தேசிய சுகாதார இயக்க ஊழியர்கள் மாவட்ட ஆட்சி யர் தா.கிறிஸ்துராஜை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.இதில், திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் வேலை செய்யும் தேசிய சுகாதார இயக்கம் (என் எச்எம்) பெண் ஊழியர்களை மரியாதைக் குறைவாகவும், அவமானப்படுத்துகிற அணுகுமுறைகளையும் சில அதிகா ரிகள் உள்நோக்கத்தோடு தொடர்ந்து செய்து வருகி றார்கள். கொரோனா காலத்திலும், பல நெருக்கடியான காலங் களிலும் மிகுந்த அர்ப்பணிப்போடு வேலை செய்த அந்த ஊழி யர்கள், தற்போது இதனால் கடும் மனச்சுமையோடு பணி களைச் செய்து வருகிறார்கள். குறிப்பாக, சமீப காலத்தில் ஆதாரமற்ற குற்றச்சாட்டு களை சுமத்தி இம்மருத்துவமனைக்குள் பணி செய்கிற இடங் களை மாற்றுவதும், இது குறித்து விளக்கம் கேட்டால் மரியா தைக் குறைவாக பேசுவதும், வேலையை விட்டு நின்று கொள் ளுங்கள் என்று கூறி மறைமுகமாக மிரட்டுவதும் அதிகரித் துள்ளது. எனவே, ஒன்றிய அரசும், தமிழக அரசும் இணைந்த  தேசிய சுகாதார திட்டம் (என்எச்எம்) ஊழியர்களுக்கான பணி களையும், பணிப் பாதுகாப்பையும், விதிமுறைகளின்படி வழங்க திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவம னையில் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என அவர்கள் அளித்த மனுவில் கேட்டுக் கொண்டுள் ளனர்.