districts

img

வா பெண்ணே மாற்றம் நோக்கி பயணிப்போம்

திருப்பூர், மார்ச் 8 - திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு “வா பெண்ணே மாற்றம்  நோக்கி பயணிப்போம்” என்ற தலைப் பில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார் பில் சனியன்று திறந்தவெளி கருத்தரங் கம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின்  மாவட்டத் தலைவர் ராணி தலைமையில்  நடைபெற்ற இந்த இயக்கத்தில், நாடு  முழுவதும் இல்லங்கள், கல்வி நிறுவ னங்கள், பணியிடங்கள், பொது இடங்க ளில் பெண்களுக்கு எதிரான பாலியல்  வன்கொடுமைகள் அதிகரித்து வருவ தைக் கண்டித்தும், இத்தகைய கொடுஞ் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடு மையான நடவடிக்கை எடுக்க வலியுறுத் தியும் பதாகைகளை ஏந்தியவாறு கைகோர்த்து நின்று முழக்கங்கள் எழுப் பினர். மேலும், ஒன்றிய மாநில அரசு அலுவ லகங்களில் விசாகா கமிட்டி அமைக்க  வேண்டும், மாதவிடாய் நாட்களில் சிறப்பு அனுமதி விடுப்பை உறுதி செய்ய  வேண்டும், சர்வதேச மகளிர் தினத்தை  விடுமுறை நாளாக அறிவிக்க வேண் டும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். தொடர்ந்து நடைபெற்ற திறந்த வெளி கருத்தரங்கில், அரசு ஊழியர் சங் கத்தின் மாநில துணைத் தலைவர் பர மேஸ்வரி “வா பெண்ணே மாற்றம் நோக்கி பயணிப்போம்” என்ற தலைப் பில் கருத்துரையாற்றினார். அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டத்  தலைவர் பவித்ராதேவி, அரசு ஊழியர்  சங்க மாவட்டச் செயலாளர் பாலசுப்பிர மணியன், மாநிலத் துணைத் தலைவர்  அம்சராஜ் உள்ளிட்டோர் சிறப்புரை யாற்றினர்.