districts

img

குடியிருப்பு கட்டுமானத்தை ஆய்வு செய்த ஆட்சியர்

கோவை, டிச. 3- தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு  வாரியம்  சார்பில், ரூ.223.07 கோடி மதிப்பீட் டில் 2,259 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருவதை கோவை ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.  தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு  வாரியம் சார்பில் கோவைப்புதூர், திரு.வி.க. நகர், கல்லாமேடு, மெர்க்கரிக்கர் ரோடு, பேரூர் வடக்கு, பிள்ளையார்புரம், வால் பாறை உள்ளிட்ட  இடங்களில் 8 திட்டப்பணி கள் மூலம்  2,259 குடியிருப்புகள் ரூ.223.07  கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகின்றது.  சுந்தரம் வீதி திட்டப்பகுதியில் ரூ.7.70 கோடி  திட்ட மதிப்பீட்டில் 55 குடியிருப்புகள் கட் டும்பணி நடைபெற்று வருவதை ஆட்சியர்  நேரில் ஆய்வு மேற்கொண்டார். இத னைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் நேதாஜிபுரம் பகுதியில் ரூ.62.53 கோடி திட்ட மதிப்பீட் டில்  720 குடியிருப்புகளும், தெற்கு பேரூர்  பகுதி-II திட்டப்பகுதியில் ரூ.14.49 கோடி  திட்ட மதிப்பீட்டில் 144 குடியிருப்புக ளும், எழில்நகர்  திட்டப்பகுதியில் ரூ.26.59  கோடி திட்ட மதிப்பீட்டில்  288 குடியிருப்புக ளும், சுந்தரம் வீதி திட்டப்பகுதியில் ரூ.7.70  கோடி திட்ட மதிப்பீட்டில் 55 குடியிருப்புக ளும்,  சித்தாப்புதூர் திட்டப்பகுதியில் ரூ.14.72  கோடி மதிப்பீட்டில் 112 குடியிருப்புகளும், பொள்ளாச்சி எம்.ஜி.ஆர்.நகர் திட்டப்பகுதி யில் ரூ.45.98 கோடி மதிப்பீட்டில் 512 குடி யிருப்புகளும், முல்லைநகர் திட்டப்பகுதி யில் ரூ.38.79 கோடி மதிப்பீட்டில் 348 குடி யிருப்புகளும், வால்பாறை திட்டப்பகுதி யில் ரூ.12.27 கோடி மதிப்பீட்டில்  80குடியி ருப்புகளும் கட்டப்பட்டு வருகின்றன. ஒவ் வொரு குடியிருப்பும் ஒரு வரவேற்பறை, ஒரு படுக்கை அறையும், ஒரு சமையலறை, குளியலறை, கழிவறை மற்றும் பயன்பாட்டு பகுதியுடன் கட்டப்பட்டு வருகின்றது என் றார். இந்த ஆய்வின்போது, பணிகளை தர மானதாகவும், விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு உத்தரவிட் டார்.