கோவை சுங்கம் பகுதியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் மாணவியர் விடுதியில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில், தங்கள் விடுதியில் கணினி வேண்டும் என்கிற கோரிக்கையை மாணவிகள் முன்வைத்தனர். இதனையேற்ற ஆட்சியர், விரைவில் 15 மாணவிகளுக்கு ஒரு கணினி என்கிற வகையில் ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார். இதேபோன்று விடுதியில் வழங்கப்படும் உணவில், கீரை சேர்க்க வேண்டும் என்கிற கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற உத்தரவிட்டார்.