districts

img

கோவை மெட்ரோ ரயில் திட்டம்: ரூ.154 கோடி ஒதுக்கீடு

சென்னை, பிப்.2- கோவை மெட்ரோ ரயில் திட்டத் துக்கு நிலம் கையகப்படுத்த முதற் கட்டமாக ரூ.154 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோவையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க தமிழக அரசு  கோவை மாநகரில் மெட்ரோ ரயில் திட்டத்தை அறிவித்துள்ளது. கோவை சத்தி ரோடு மற்றும் அவி னாசி ரோடு என இரு பிரிவுகளாக  மெட்ரோ ரயில் பாதைகள் அமைக் கப்பட உள்ளன. மொத்தம் 34.8 கி.மீ.  நீளம் கொண்ட மெட்ரோ ரயில்  திட்டத்தின் மூலதனச் செலவு ரூ.10  ஆயிரத்து 740 கோடியாகும். கோவை மெட்ரோ ரயில் முதற்கட்ட  திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை ஒன்றிய அரசிடம் சமர்ப் பிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ திட்டத்தின் நடைமுறைகளை விரை வாக முடித்து செயல்படுத்தும் போது, பொதுமக்களுக்கு ஏற்படும் அசவுகரியங்களை குறைப்பது, நிலத்தை கையகப்படுத்த திட்டம்  தயாரித்தல், சாலை, மேம்பாலத் துடன் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பணிகள் தொடங்கியுள்ளன. அதன் படி, கடந்த மாதம் 30 ஆம் தேதி யன்று கோவை சத்தி ரோடு கண பதி டெக்ஸ்டூல் முதல் சரவணம் பட்டி வரை மெட்ரோ ரயில் பயண  பாதைக்காக நிலம் கையகப்படுத்து தல் குறித்து மெட்ரோ திட்ட இணை  பொது மேலாளர் நாகேந்திரன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சாலையின் அளவு, கட் டிடங்கள், மெட்ரோ ரயில் திட்டத் துக்கு தேவையான தனியார் மற்றும்  அரசு நிலம் உள்ளிட்ட பல்வேறு முக் கிய அம்சங்கள் குறித்து வரைபடம்  மூலம் ஆய்வு செய்யப்பட்டது. இந்நிலையில், கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிலம்  கையகப்படுத்த முதற்கட்டமாக ரூ.154 கோடியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒதுக்கி யுள்ளது. கோவை நகரில் மெட்ரோ ரயில் நிறுவன அலுவலகம் அமைக்க மாநகராட்சி இடம் ஒதுக்க உள்ளது.  மெட்ரோ திட்டப்பணிகளுக்கு நிலம் எடுப்பதற்கான சர்வே தொடங்கி, அதன்பிறகு வருவாய்த் துறை மூலம் கையகப்படுத்தும் பணிகள் நடக்கும் என தகவல் வெளி யாகியுள்ளது.