அவிநாசி, ஜூலை 14- வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு செய்துள்ள கூட்டுறவு சங்கத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றி யம், அ.வடுகபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் துணைத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த சரவணகுமார் என்பவர் கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார்.
அப்போது, சரவணகுமாரின் உறவினருக்கு சொந்த மான நிலத்தின் மீது கேசிசி பயிர் கடன், மத் திய கால கடன் என தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ.3 லட்சத்து 82 ஆயி ரம் கடன் பெற்றுள்ளார். இந்த கடனுக் கான அசல் மற்றும் வட்டியினை பல வரு டங்களாக திருப்பி செலுத்தாமல் வந்துள் ளார்.
இந்நிலையில், 2018 ஆம் ஆண்டு கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவராக சரவணகுமார் தேர்வு செய்யப்பட்ட நிலை யில், அந்நிலத்தின் மீது முறைகேடாக ரூ. 1.50 லட்சம் வரை கடன் பெற்றுள்ளார். எனவே, இவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கூட்டுறவு சங்க துணைத் தலை வர் ராமசாமி உட்பட சங்க நிர்வாகிகள் திருப் பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த னர்.