தருமபுரி, ஆக. 17- செட்ரப்பட்டி ஊராட்சியில் திட்டப்பணிகளில் நடைபெ றும் முறைகேடுகளை தடுக்கக்கோரி செட்ரப்பட்டி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் மனு அளித்தனர்.
இதுகுறித்து அப்பகுதிப் பொதுமக்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழியிடம் அளித்த மனுவில் தெரி விக்கப்பட்டுள்ளதாவது, தருமபுரி மாவட்டம், அரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட செட்ராப்பட்டி ஊராட்சி செயலாளராக சிவஞானம் என்பவர் உள்ளார்.
இதே ஊராட் சியில் நீண்ட ஆண்டுகாலம் பணியாற்றும் இவர் ஊராட்சி நிதியில் பல்வேறு வகையில் முறைகேடு செய்துள்ளார்.
குறிப்பாக பண்ணைக்குட்டை அமைத்ததாகவும், பல்வேறு திட்டப்பணிகள் வேலை செய்யாமலேயே செய்ததாகக் கூறி முறைகேடும் செய்துள்ளார். எனவே, இதுகுறித்து விசா ரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.