ஈரோடு, ஜுன் 22- உள்நாட்டு மீனவர்களின் வாழ்வா தாரத்தைப் பாதுகாக்க வலியுறுத்தி சிஐடியு மீன்பிடி தொழிற்சங்க கூட்ட மைப்பு சார்பில் காத்திருக்கும் போராட் டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங் களிலும் உள்நாட்டு மீனவர்கள் லட்சக்கணக்கானோர் குடும்பங்களாக ஏரி, குளம், அணைகளில் மீன்பிடித் தொழில் செய்து வாழ்ந்து வருகின் றனர். இவர்கள் உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்களில் ஓரளவிற்கு உறுப்பினராகவும் இருந்து வருகின் றனர். இதன் மூலம் தமிழ்நாடு அரசின் சுட்டுப்பாட்டில் உள்ள ஏரி, குளம், அணைகளில் உள்நாட்டு மீனவர் கூட்டு றவு சங்கங்கள் வழியாக கடந்த காலங்க ளில் மீன் பாசி குத்தகை எடுத்து மீன்பிடி தொழில் நடத்தி வந்தனர். இந்நிலையில், தமிழக அரசு பொதுப்பணி துறையின் கட்டுப் பாட்டில் உள்ள ஏரி, குளங்களில் மீன் பாசி குத்தகையை பொதுப்பணிதுறை யினரே விடலாம் என்று உள்ளது. இதற்கான அரசாணை எண் 16 (2011) மற்றும் அரசாணை எண் 72 (2014) உள்நாட்டு மீனவர்களின் வாழ்வினை சீர்குலைத்துள்ளது. இந்நிலையில் சென்னை உயர்நீதி மன்றத்திற்கு உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்களின் சார்பில் வழக்கு எண் WP.No.6819/2023 மற்றும் தொகுப்பு வழக்குகள் நடைபெற்றது. இவ்வழக்கின் தீர்ப்பு கடந்த 21.06.2023 அன்று நீதியரசர் தண்டபாணி வழங்கி னார். இந்த தீர்ப்பின்படி அரசாணை நிலை எண் 332 17.11.1993 படியும், வரு வாய் நிலை எண் 211-ன் படியும் அனைத்து ஏரி குளம் அணைகளில் மீன் பாசி குத்தகை உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டும் என்று உள்ளது. இதன்படி அந்த மாவட்டத்தில் உள்ள ஆட்சியர்கள் உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு மீன்பாசி குத்தகை உடனடியாக வழங்க வேண் டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளனர். எனினும் நாளது தேதி வரை உத்தரவு அமலாகவில்லை. இந்நிலையில், புதனன்று சென்னை, சேப்பாக்கம், சிஐடியு மாநிலக்குழு அலுவலகத்தில் தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்றது. மாநில செயல் தலைவர் எம்.கருணாமூர்த்தி தலைமை வகித் தார். மாநில நிர்வாகிகளும், உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். மாநில பொதுச் செயலாளர் எஸ்.அந்தோணி, சிஐடியு மாநில துணை பொதுச்செயலாளர் பி.குமார் மற்றும் மாநில நிர்வாகிகள் ஜி.விநாயகமூர்த்தி, எஸ்.பரமசிவம். இரா.லோகநாதன், ஈரோடு ஏ.கே.பழனிச்சாமி, எஸ்.சதீஷ். எம்.அறிவழ கன், எம்.தங்கராசு, குன்னூர் மேட்டுப்பா ளையம், ஏ.நடராஜன், பி.சி.வடிவேல், அந்தியூர் நடராஜ், ஏ.பிரகாசம். பி.மேட் டுப்பாளையம், ஏ.ஜி.கோபால் அந்தி யூர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து இக்கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் எஸ்.அந்தோணி கூறுகையில், அனைத்து ஏரி குளம் அணைகளில் மீன் பாசி குத்தகை உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டும் என்று நீதிமன்ற உத்தரவு பெற்று 12 மாதங்கள் ஆகியும், தமிழக அரசு கண்டுகொள்ளாமல் மௌனம் சாதிப்பது, ஏழை மீனவர்களின் வயிற் றில் அடிக்கும் செயலாகும். இது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் உள்ளது. எனவே இனியும் தாமதிக்காமல், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவினை துரிதமாக அமல்படுத்த வேண்டும். மீன்பாசி குத்தகை உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு உடனடியாக வழங்கி உள்நாட்டு மீனவர்கள் வாழ் வாதாரத்தை பாதுகாக்க அரசாணை வெளியிட வேண்டும். மேலும், தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகை யில் வரும் ஜூலை மாதம் 12ஆம் தேதி பவானிசாகர் மண்டல அலுவலகமான மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குனர் அலுவலகம் முன்பு மாபெரும் காத்திருப்பு போராட்டத்தை நடத்துவது என தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. இத்துடன் வாழ் வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் காத்திருப்பு போராட்டத் திற்கு அனைத்து பகுதி மீனவர்களும், உழைப்பாளி மக்களும் அரசியல் வேறு பாடு இன்றி கோரிக்கைகள் வெற்றிப் பெற ஒன்றுபட்டு வருமாறு தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு சிஐடியு வேண்டுகோள் விடுத்துள்ளது, என்றார்.