சிப்காட் தொழிற்கூடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வருக
தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தல்
ஈரோடு, ஜூலை 20- பெருந்துறை சிப்காட் வளாகத்தில் உள்ள தொழிற் கூடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்து, பட்டியலின மக்க ளுக்கான ஒதுக்கீட்டை உடனடியாக வழங்கிட வேண்டும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது. ததீஒமு ஈரோடு மாவட்டத் தலைவர் பி.பி.பழனிசாமி, மாவட்டச் செயலாளர் எம்.அண்ணாதுரை ஆகியோர் விடுத்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, ஈரோடு, பெருந்துறை தாலுகா, ஈங்கூர் கிராமத்தில் பெருந்துறை சிப்காட் வளா கத்தில் பட்டியல் இன மக்களை தொழில் முனைவோர் ஆக்கும் திட்டத்தின்படி 200 பின்னலாடை தொழிற்கூடங் களுக்கு ரூ 150.35 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. நில மதிப்பு ரூ.203.80 லட்சம், கழிவு நீர்த்திட்டம் ரூ79.00 லட்சம், சாலை வசதி ரூ.9.35 லட்சம் உள்ளிட்ட அடிப்படை கட்டுமான வசதிகளுக்காக, மொத்தம் ரூ.2038.80 லட்சம் நிதி ஒதுக்கப் பட்டது. இதனைத்தொடர்ந்து, தொழிற்கூடங்கள் கட்டு மானங்கள் கட்டும் பணி 1992ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1996ல் முடிவுற்றது. இவ்வாறு கட்டப்பட்ட 200 பின்னலாடை தொழிற்கூடங்கள் இன்னும் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப் படவில்லை. கடந்த 2015ஆம் ஆண்டு மற்றும் 2016ஆம் ஆண்டில் தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதனையடுத்து, தாட்கோ அதி காரிகள் பேச்சுவார்த்தை நடத்தி எழுத்துப் பூர்வமான உறுதி மொழியை அளித்தனர். இதுவரை இந்த தொழிற்கூடங்களில் ஏற்பட்டுள்ள பழுதுகளைச் சரி செய்து, பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படவில்லை. எனவே, எதிர் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி பெருந்துறை சிப்காட் வளாகத்தில், தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத்தலைவரும், சிபிஎம் கந்தர்வகோட்டை எம்எல்ஏ-வுமான எம்.சின்னதுரை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவிக் கப்பட்டுள்ளது.
20 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்
சேலம், ஜூலை 20- கருப்பூர் சுங்கச்சாவடி பகுதியில், தடை செய்யப்பட்ட 20 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த காவல் துறை யினர், இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர். தமிழ்நாட்டில் குட்கா போன்ற போதைப்பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால், சிலர் சட்டவிரோதமாக கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு குட்கா கடத்தி வரு கின்றனர். சேலம் மாநகர், மாவட்ட காவல் துறையினர் சோதனை நடத்தி, குட்கா கடத்தலை தடுத்து வருகின்றனர். ஆனால், தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதை முற்றிலும் தடுக்க கருப்பூர் சுங்கச்சாவடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடு பட்டனர். அதன்படி வியாழனன்று அதிகாலை 4.30 மணியளவில், சேலம் மாநகர உதவி ஆணையர் வெங்கடேஷ் தலைமையில், நகர குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் பழனியம்மாள் உள் ளிட்ட காவல் துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடு பட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில், மூட்டை மூட்டையாக குட்காப் பொருட் கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 20 கிலோ குட்காப் பொருட்களை பறிமுதல் செய்த காவல் துறை யினர், அதனை கடத்தி வந்த ராஜா மற்றும் கல்யாணசிங் ஆகியோரை கைது செய்தனர்.
உணவகத்தில் போதை எஸ்ஐ ரகளை
சேலம், ஜூலை 20- சேலத்தில் குடிபோதையில் உணவகத்தில் ரகளை செய்த எஸ்ஐ மற்றும் காவலர் குறித்த வீடியோ சமூக வலைதளங் களில் பரவி வருகிறது. சேலம், அம்மாபேட்டையில் உணவகம் ஒன்றில், குடி போதையில் வந்த இருவர் உணவு அருந்திவிட்டு அங்கேயே உறங்கியுள்ளனர். இதுகுறித்து உணவக உரிமையாளர் அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதற் கிடையே ஓட்டலுக்கு போதையில் சாப்பிட வந்தவர்கள் போலீ சார் என தெரியவந்தது. இதனையடுத்து, அவர்களை எழுப்பியபோது அநாகரீக மாக நடந்து கொண்டுள்ளதாக தெரிகிறது. இச்சம்பவங் களை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். தற்போது இந்த வீடியோக்கள் வைரலாகி வருகிறது. உணவகத்தில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட வர்கள் சேலம் குற்றப்பிரிவை சேர்ந்த உதவி ஆய்வாளர் சிவசக்தி, தலைமைக் காவலர் செந்தில்குமார் என தெரிய வந்தது. இதுதொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவக் குமார் உத்தரவின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வரு கிறது. விசாரணை முடிவில் 2 பேர் மீதும் துறைரீதியாக நடவ டிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.
முள்ளங்கி விலை வீழ்ச்சி
தருமபுரி, ஜூலை 20- சந்தையில் முள்ளங்கி வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. தருமபுரி மாவட்டம், பாலக்கோடு, கரகதஅள்ளி, காட்டம்பட்டி, பெல்ரம்பட்டி, மாரண்டஅள்ளி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் முக்கியத் தொழி லாக உள்ளது. இப்பகுதி களில் அதிகளவு தக்காளி, முள்ளங்கி உள்ளிட்ட காய் கறிகள் சாகுபடி செய்யப்படு கிறது. கடந்த வாரம் ஒரு கிலோ முள்ளங்கி ரூ.25க்கு விற்ப னையானது. இந்நிலையில், பாலக் கோடு பகுதியில் முள்ளங்கி அறுவடை தொடங்கியதால் சந்தை மற்றும் மார்க்கெட் டுக்கு முள்ளங்கி வரத்து அதிகரித்துள்ளது. இதனால், முள்ளங்கி விலை கடும் வீழ்ச்சி அடைந்து ஒரு கிலோ ரூ.2க்கு விற்பனை செய் யப்பட்டு வருகிறது. இத னால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஒரு சில விவசாயிகள் முள்ளங்கியை அறுவடை செய்யாமல் கால்நடைகளை விட்டு மேய்த்து வருகின்றனர்.
ஈசல் திட்டில் பலத்த காற்றில் பழங்குடி நபர் வீட்டு மேற்கூரை சேதம்
திருப்பூர், ஜூலை 20 - திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் ஈசல்திட்டு என்ற பழங்குடி மக்கள் சிறு கிராமக் குடியிருப்பு உள்ளது. இங்கு புதனன்று இரவு பலமான காற்ற டித்தது. இதில் அங்கு குடியிருக்கும் பழங்குடியினத்தவர் ஒரு வரது வீட்டின் மேற்கூரை தூக்கி வீசட்பபட்டது. உடனடியாக அந்த வீட்டில் வசிப்பவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வியாழனன்று அந்த குடிசையை சரி செய்யும் பணியில் ஈடு பட்டார்.
பாஜக அரசை அகற்றுவோம்: தொழிற்சங்கங்கள் சூளுரை
தாராபுரம், ஜூலை 20 - தாராபுரத்தில், ஒன்றிய பாஜக அரசின் தொழிலாளர் விரோத, மக் கள் விரோத விவசாயிகளின் நல னுக்கு எதிரான நடவடிக்கைகளை கண்டித்தும், மக்களை தாக்கும் மோடி அரசை ஆட்சியில் இருந்து அகற்றுவோம் என்ற முழக்கத்தோ டும் பிரச்சார இயக்கம் நடைபெற் றது. சிஐடியு மாவட்ட துணைத்தலை வர் என்.கனகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த பிரச்சார இயக் கத்தில் எல்பிஎப், ஏஐடியூசி, ஐஎன்டி யூசி, எச்எம்எஸ், எம்எல்எப் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கத்தினர் பங்கேற்றனர். தாராபுரம் அண்ணா சிலை, பேருந்து நிலையம், காமராஜ புரம், ஐந்து முக்கு ஆகிய பகுதிக ளில் நடைபெற்றது. முன்னதாக பிரச் சாரத்தின்போது தொழிலாளர் விரோத சட்ட தொகுப்பை அமல்படுத் தாமல் திரும்பப் பெறு, குறைந் தபட்ச மாத ஊதியம் ரூ.28 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும். குறைந் தபட்ச ஓய்வூதியம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். பொதுத் துறையை தனியாருக்கு தாரை வார்க்கும் போக்கை கைவிட வேண்டும். பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு மீதான கலால் வரியை நீக்க வேண்டும். கல்வி, மருத்துவம், பாதுகாக்கப்பட்ட குடிநீர் அனைவருக்கும் சமமாக கிடைப்பதை உறுதி செய்ய வேண் டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகள் குறித்து கடந்த 9 ஆண்டுக ளாக தொடர்ந்து தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் அதில் ஒன்றை கூட நிறைவேற்றா மல், மக்கள் விரோத நடவடிக்கைக ளில் ஈடுபட்டு வரும் ஒன்றிய பாஜக அரசை ஆட்சியில் இருந்து தூக்கி எறிவோம் என்று முழக்கங்கள் எழுப்பட்டது. இதில் சிஐடியு நிர்வாகிகள் பி. பொன்னுசாமி, ராமசாமி, ஐஎன்டி யூசி ராஜேந்திரன் மற்றும் அனைத்து தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வா கிகள் பலர் கலந்து கொண்டனர்.
மாற்றுத்திறனாளிகள் சங்க கிளை அமைப்பு
நாமக்கல், ஜூலை 20- ராசிபுரம் வட்டத்திற்குட்பட்ட 2 ஊராட்சிகளில் மாற்றுத் திறனாளிகள் சங்க கிளை அமைக்கப்பட்டு, புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், வெண்ணந்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட தேங்கல்பாளையம் ஊராட்சியில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கிளை அமைப்பு கூட்டம் தங்கராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் சங்க மாவட்ட அமைப்பாளர் எம்.ஆர்.முருகேசன், வெண் ணந்தூர் கிளை தலைவர் எம்.சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து சங்கத்தின் கிளை தலை வராக எம்.தங்கராஜ், செயலாளராக வி.அருள்செல்வி, பொரு ளாளராக பி.சுப்பிரமணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்ட னர். குட்லம்பட்டி ஊராட்சியில் கோவிந்தன் தலைமையில் புதிய கிளை அமைப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட அமைப்பாளர் எம்.ஆர்.முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கிளை தலைவராக கோவிந்தன், செயலாளராக முருகேசன், பொருளாளராக திலகரசி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
கனமழையால் தடுப்புச்சுவர் இடிந்து சேதம்
கோவை, ஜூலை 20- வால்பாறையில் பெய்த கனமழை காரணமாக, எம்ஜிஆர் நகர் பகுதியில் நகராட்சி தடுப்புச்சுவர் இடிந்து சேதமடைந் தது. கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. சின்னக்கல்லார், சோலையாறு அணை, தாலுகா அலுவலகம் உள்ளிட்ட பகுதி களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், எம்ஜிஆர் நகர், அண்ணா நகர் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான தடுப் புச்சுவர் இடிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து வியாழனன்று காலை அப்பகு தியைச் சேர்ந்த பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனர். அதன்பேரில் அப்பகுதியில் நகர்மன்ற தலைவர் மற்றும் ஆணையர் பணி மேற்பார்வையாளர் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு, உடனடியாக போர்க்கால அடிப்படை யில் தடுப்புச்சுவரை கட்டித் தரப்படும் என உறுதியளித்த னர். மேலும் அப்பகுதியில் நடைபாதை படிக்கட்டுகள் இடியும் நிலையில் உள்ளதால் அதனையும் சரி செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்
கோவை, ஜூலை 20- கவுண்டம்பாளையத்தில் ஆக்கிரமிப்பு களை அகற்ற வந்த அதிகாரிகளிடம் கடை உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம், கவுண்டம்பாளையத் தில் இருந்து இடையார்பாளையம் செல்லும் சாலையில் இருபுறமும் கடைகள் உள்ளன. சில கடைகள் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்து இருப்பதாலும் சாலைகள் அகலம் குறைந்து அந்த வழியாக செல்லும் வாகனங்களுக்கு நெருக்கடிகள் ஏற்படுகின்றன. இதனிடையே கவுண்டம்பாளையம் ஜங்சனில் இருந்து டிவிஎஸ் நகர் திரும்பும் பாலம் வரை ஆக்கிர மிக்கப்பட்டுள்ள கடைகளுக்கு சில நாட்க ளுக்கு முன்பு நோட்டீஸ் விநியோகம் செய் யப்பட்டுள்ளது. அதில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தரும்படியும், சாலை விரிவாகத்திற்கு ஒத்துழைக்கும்படியும் கேட்டுள்ளனர். ஆனால், யாரும் அகற்றியதாக தெரிய வில்லை. இந்நிலையில், வியாழனன்று மாநில நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடு பட்டனர். அப்போது அங்கிருந்த சில கடை காரர்கள் இருபுறமும் அனைத்து ஆக்கிர மிப்புகளையும் அகற்ற வேண்டும். ஒருதலை பட்சமாக செயல்படக்கூடாது என்று வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும். ஒரு வார காலம் அவகாசம் கேட்டு மனு அளித்தனர். அதற்கு 2 நாட்கள் அவகாசம் தருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இத னையடுத்து அனைவரும் கலைந்து சென்ற னர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் ஏராள மான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடு படுத்தப்பட்டிருந்தனர்.
மூங்கில்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
உதகை, ஜூலை 20- கூடலூரில் தொடர் மழையால் சாலையில் மூங்கில்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதி யில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுகின்றன. இதன் காரணமாக கிராமப்புறங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இந்நிலையில், தொடர் மழை காரண மாக கூடலூரிலிருந்து மைசூரு செல்லும் தேசிய நெடுஞ்சா லையில் மூங்கில்கள் சரிந்து விழுந்தன. இதனால் வாகனங் கள் செல்ல முடியாதவாறு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் மூங்கில்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், பெருமளவில் மூங்கில்கள் சரிந்து கிடந்ததால் உடனடியாக அகற்ற முடியவில்லை. இதைத்தொடர்ந்து கூடலூர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், பொதுமக்கள் மற்றும் பொக்லைன் எந்திரம் உதவி யுடன் மூங்கில்களை அகற்றினர். அதன்பிறகு போக்கு வரத்து சீரானது. கூடலூர் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மண் சரிவு ஏற்படும் அபாயமும் காணப்படு கிறது. எனவே, பெரும் அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு, மண்சரிவு ஏற்பட அதிக வாய்ப்புள்ள பகுதிகளில் தடுப்பு அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத் துள்ளனர்.
பால் சொசைட்டியை திறந்து அரசியல் செய்த அதிமுக ஊராட்சி தலைவர்
அவிநாசி, ஜூலை 24- அவிநாசி, ஒட்டர்பாளையம் பகுதி யில் பால் சொசைட்டி கட்டத்தை ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் அனுமதி பெறா மல், தனது அரசியல் லாபத்திற்காக திறப்பு விழா நடத்தி நாடகத்தை அரங் கேற்றிய அதிமுக ஊராட்சி மன்ற தலை வரின் செயல் முகச்சுழிப்பை ஏற்படுத்தி யுள்ளது. அவிநாசி ஒன்றியம், புஞ்சை தாமரை குளம் ஊராட்சிக்கு உட்பட்ட ஒட்டார் பாளையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் வசித்து வருகின்றனர். இவர்கள் கால்நடை வளர்ப்பிலும் ஈடு பட்டு வருகின்றனர். இந்நிலையில் மாடு, எருமை, போன்ற கறவைகளின் பால்களை ஒட்டர்பாளையம் பகுதி கூட் டுறவு சொசைட்டியில் ஊற்றி வருகின்ற னர். இப்பகுதியில் அமைந்துள்ள கூட்டு றவு பால் சொசைட்டி கட்டடம் பழுத டைந்துள்ளது. இதனை சீரமைக்க அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். தற்காலிகமாக பால் சொசைட்டி மேல்நிலைத் தொட்டி யின் குறுகிய இடத்திற்கு மாற்றம் செய் யப்பட்டது. இதனைத்தொடர்ந்து 2018 -19 ஆகிய வருடத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதி வேலை வாய்ப்பு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டடப்பணிகளும் நடைபெற்ற கொண் டிருந்தது. இப்பணிகள் திடீரென்று நிறுத்தம் செய்யப்பட்டது.
இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்தி டம் தொடர்ச்சியாக, விவசாயிகள் கட்ட டப் பணிகளை விரைந்து முடிக்குமாறு கோரிக்கை விடுத்து வந்தனர். இருப்பி னும் பணிகள் நடைபெறாமல் இருந்து வருகிறது. இதனை மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கட்டிடப் பணிகளை விரைந்து முடித்து தருமாறு அப்பகுதி விவசாயி கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து ஜனவரி மாதத்தில் தீக்கதிரில் செய்தி வெளியிடப்பட்டு, பணிகள் நடை பெற்று, நிறைவு பெற்றது. இந்நிலையில், ஊராட்சி நிர்வாகத் தின் ஒப்புதல் பெறாமல், தன்னுடைய அரசியல் லாபத்திற்காக அதிமுக ஊராட்சி மன்ற தலைவர், சரவணகுமார் தன்னிச் சியாக இந்த பால் சொசைட்டி கட்ட டத்தை வியாழனன்று திறப்பு விழா செய் தார். இது சம்பந்தப்பட்ட ஊராட்சி மன் றத்தின் உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி யது. இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய ஆணையர் விஜயகுமாரிடம் கேட்ட போது, எங்களுக்கு இந்த தகவல் தெரிய வில்லை, திறப்பு விழா நடைபெற்று இருந்தால் அது தவறு. ஞாயிற்றுக் கிழமை அன்றுதான் திறப்பு விழா நடை பெறுவதாக இருந்தது. இந்த நிகழ்வு குறித்து விசாரணை நடத்துவதாக தெரி வித்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த பால் சொசைட்டி யால் பலனடையும் விவசாயிகளோ, சட்டமன்ற, நாடாளுமன்ற, உறுப்பினர் கள் எவரும் இல்லாமல், துறை சார்ந்த அதிகாரிகளும் இல்லாமல், குறிப்பாக ஆணையாளருக்கே தெரியாமல் கட்ட டத்தை திறந்து உள்ளார். இவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
மின்தடை
நாமக்கல், ஜூலை 20- நாமக்கல் மாவட்டம், வில்லிபாளையம் துணை மின் நிலையத்தில் வெள்ளி யன்று (இன்று) பராமரிப்பு பணிகள் நடைபெற உள் ளது. இதனால் வில்லிபாளை யம், ஜங்கமநாயக்கன்பட்டி, சின்னமநாயக்கன்பட்டி, சுங் ககாரன்பட்டி, பெரியா கவுண் பில்லூர், கூடச்சேரி, அர்த்த னாரிபாளையம், ஓவியம்பா ளையம், தேவிபாளையம், கீழக்கடை, கஜேந்திரநகர், சுண்டக்காபாளையம் உள் ளிட்ட பகுதிகளில் செவ்வா யன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சா ரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட் டுள்ளது.