திருப்பூர், ஜன. 11 - திருப்பூர் மாவட்டத்தில் இலவச வேட்டி, சேலைகள் குறைந்த அளவே ஒதுக்கீடு செய் யப்பட்ட நிலையில், வேட்டி, சேலை கிடைக் காமல் பொது மக்கள் பலர் ஏமாற்றமடைந் தனர். ரேசன் கடைகளில் ஊழியர்களிடம் வாக் குவாதத்தில் ஈடுபட்டனர். பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் பரி சுத் தொகுப்புடன், இலவச வேட்டி சேலையும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தி ருந்தது. பொங்கல் பரிசுத் தொகுப்பு ஜனவரி 13ஆம் தேதி வரை தரப்படும் என்று அறிவித்த அரசு, இலவச வேட்டி, சேலைகளை ஜனவரி 31ஆம் தேதி வரை வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ரேசன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலைகள் வழங்கும் பணி கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது. அனைத்து நியாய விலைக் கடைகளிலும் பொங்கல் பரிசுத்தொ குப்பு வழங்கப்படுகிறது. அதேசமயம் பல கடைகளில் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தில் கார்டுதாரர்களுக்கு வேட்டி, சேலைகள் வழங்கவில்லை. உடுமலை ஒன்றி யம், தாராபுரம், பல்லடம், அவிநாசி, திருப்பூர் நகரம் உள்பட அனைத்து நகரம், கிராமப்பு றங்களிலும் உள்ள நியாயவிலைக் கடைக ளில் பயனாளிகளுக்கு ஒரேயொரு இலவச வேட்டி மட்டுமே வழங்கியுள்ளனர். சேலை வழங்கவில்லை. இதனால் கடை விற்பனை யாளர்களிடம் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். இது தொடர்பாக உணவுப் பொருள் வழங் கல் துறையில் கேட்டபோது, முதல் கட்டமாக கடைகளுக்கு 30 முதல் 35 சதவிகிதம் வேட்டி, சேலைகள் மட்டுமே அனுப்பி வைக்கப்பட் டுள்ளது. ஜனவரி 31ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ளதால் அடுத்தடுத்து அனைத்து பயனாளிகளுக்கும் வேட்டி, சேலை கொடுக்கப்படும் என்று கூறினர். அதேசமயம் பயனாளிகளுக்கு ஒரே யொரு வேட்டி மட்டுமே கொடுக்கப்படுகிறது, சேலை தரப்படவில்லை என்று புகார் வரு வது பற்றி கேட்டபோது, உணவு வழங்கல் துறை வட்டாட்சியர் ஒருவர் பதிலளிக்கை யில், தனி கார்டுதாரர்களாக இருந்தால் அவர் ஆணாக இருந்தால் வேட்டி மட்டும் அல்லது பெண்ணாக இருந்தால் சேலை மட்டும் தான் வழங்கப்படும் என்று கூறினார். ஆனால் தனியர்கள் இல்லாமல் பல உறுப்பினர்கள் இருக்கக்கூடிய கார்டுதாரர்களுக்கும் ஒரே யொரு வேட்டி மட்டும் கொடுக்கப்படுவதாக பொது மக்கள் புகார் கூறினர். கடந்த ஆண்டு இலவச வேட்டி, சேலை திட்டத்தில் அனைவருக்கும் உரிய வேட்டி, சேலைகள் உற்பத்தி நடைபெறுகிறது. டிசம் பர் 31ஆம் தேதிக்குள் உற்பத்தியை முடித்து அனைத்து கடைகளுக்கும் பகிர்ந்தளித்து, மக்களுக்கு வேட்டி, சேலை விநியோகிக்கப் படும் என்று அமைச்சர்கள் கூறியிருந்தனர். ஆனால் நியாயவிலைக் கடை ஊழியர் கள் கூறுகையில், 100 பேருக்குத் தர வேண் டிய இடத்தில் 30, 35 வேட்டி, சேலைகள் மட் டுமே கடைகளுக்குத் தரப்பட்டுள்ளது. ஆனால் பில் இயந்திரத்தில் 100 வேட்டி, சேலைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பதிவேற்றியுள்ளனர். இருக்கும் குறைந்த ளவு வேட்டி, சேலைகளை பயனாளிகளுக்கு வரிசைப்படி கொடுக்கும்போது கிடைக்காத வர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர் என்று தெரிவித்தனர். இது குறித்து உடுமலையில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் கி.கனக ராஜ் கூறுகையில், இப்போது மட்டுமல்ல, கடந்த ஆண்டும் பொங்கல் பண்டிகை சம யத்தில் முழுமையாக இலவச வேட்டி, சேலை கொடுக்கவில்லை. ஒரு பகுதி மட்டுமே வழங் கினர். மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தி யபோது, வேறெங்கோ இருந்து ஏற்பாடு செய்து வேட்டி, சேலைகள் வழங்கினர். இந் தாண்டும் அரை குறையாக திட்டத்தை நிறை வேற்றிவிட்டு முழுமையாகக் கொடுத்ததாக கணக்குக் காட்டப் போகிறார்கள் என்று கூறி னார். ஜனவரி 31ஆம் தேதி வரை அனைத்து கார்டுதாரர்களுக்கும் உரிய இலவச வேட்டி, சேலை கொடுக்கப்படும் என்று கூறினாலும், அதை முழுமையாக கண்காணித்து, அனைத்து பயனாளிகளுக்கும் போய்ச் சேருவதை உறுதிப்படுத்த எந்த ஏற்பாடும் இல்லை. தற்போது ஒரு வேட்டி அல்லது சேலை மட் டும் பெற்றுக் கொண்டு செல்பவர்கள் எஞ்சிய மற்றொரு வேட்டி அல்லது சேலையைப் பெற மீண்டும் ரேசன் கடைக்கு வரும் வாய்ப்புக் குறைவு. இது போன்ற சமயங்களில் முறைகே டாக வேட்டி, சேலைகளை விற்கக்கூடிய நிலை ஏற்படும். எனவே பயனாளிக்கு பொங் கல் பரிசுத் தொகுப்பு கொடுக்கும் போதே வேட்டி, சேலை இரண்டையும் சேர்த்தே கொடுக்க வேண்டும் என்றும் பயனாளிகள் கூறினர். வேட்டி, சேலை தரும் திட்டத்தில் திருப் பூர் மாவட்டத்தில் பரவலாக மக்களிடம் அதி ருப்தி ஏற்பட்டிருக்கும் நிலையில், திருப்பூர் மாவட்ட நிர்வாகம், தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து அனைத்து பயனாளிக ளுக்கும் வேட்டி, சேலை கிடைப்பதை உத்த ரவாதப்படுத்த வேண்டும் என்று நியாய விலைக் கடை ஊழியர்கள் கூறினர்.