தரங்கம்பாடி, ஜூலை 24- மயிலாடுதுறையில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங் கத்தின் நாகை மாவட்ட மாநாடு சங்கத்தின் மாவட்டத்தலைவர் ஜெகதீசன் தலைமையில் புதனன்று நடைபெற்றது. மாநாட்டினை சேதுமாணிக்கம் துவக்கி வைத்து உரையாற்றினார். மாநி லத்தலைவர் இல.ஸ்ரீதரன் மாநாட்டை வாழ்த்தி உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் வ.பழனிவேலு, மாவட்டப் பொருளாளர் மா.பாலசுப்ரமணியன், நாகராஜன், மயிலாடுதுறை திருக்குறள் பேரவை தலைவர் சிவசங்கரன், மாநில துணைத்தலைவர் து.கணேசன், கரும்பு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் இமயவரம்பன், ஜாக் அமைப்பின் த. இராயர் உள்ளிட்ட நிர்வாகிகள், வட்டத் தலைவர்கள் உரையாற்றினர். மயிலாடுதுறையை தனி மாவட்ட மாக அறிவிக்க வேண்டும். புதிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநிலத் தலைவர் ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்ததற்கு கண்ட னம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. சங்கத்தின் புதிய மாவட்டச் செய லாளராக இரா.இராதாகிருஷ்ணன், மாவட்டத் தலைவராக வ.பழனிவேலு, பொருளாளராக மா.பாலசுப்பிரமணி யன், மாவட்டத் துணைத் தலைவர்க ளாக இராமதாஸ், ஜெயக்குமார், கரு ணாநிதி, மாவட்ட இணைச் செயலா ளர்களாக திருஞானசம்பந்தம், ஜெகத் ரட்சகன், கோவிந்தராஜன், வேம்பு ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர்.