கோவை காமராஜபுரத்தில் 100க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் மேற்கொள்ளப்பட்ட சிறப்புத் தூய்மை பணியினை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ப. ராஜ்குமார் துவங்கி வைத்தார்.
கோவை காமராஜபுரம் 69-ஆவது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் கோவை மாநகராட்சி சார்பில் சிறப்புத் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களைக் கொண்டு சாக்கடை சுத்தம் செய்தல், சாலைகளில் உள்ள கட்டிட இடுபாடு மண்களை அகற்றுதல், டெங்கு கொசு உற்பத்தினை தடுத்தல், டெங்கு கொசு புகை மருந்து அடித்தல், சாலைகளின் இருபுறங்களிலும் பொதுமக்களுக்கு இடையூறாக மின்சாரக் கம்பிகளில் படர்ந்துள்ள மரக்கிளைகளை அகற்றுதல், தேவையற்ற செடி, கொடிகளைப் புதர்களை அகற்றுதல் உள்ளிட்ட கூட்டுத் தூய்மை பணியினை மேற்கொண்டனர். இந்தப் பணிகளைக் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ப. ராஜ்குமார் துவங்கி வைத்தார். இந்த நிகழ்வின் போது மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.