கோவையில் 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி மாணவர்கள் 7 பேரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
கோவையை சேர்ந்த 17 வயது சிறுமி சமூக வலைதளம் மூலம் சில இளைஞர்களுடன் பழகி வந்துள்ளார். அந்த பழக்கம் நாளடைவில் நட்பாக மாறியுள்ளது. இந்நிலையில், அந்த இளைஞர்கள் குனியமுத்தூரில் உள்ள அறைக்கு சிறுமியை வரவழைத்துள்ளனர். பின்னர் 7 பேரும் சேர்ந்து, அச்சிறுமியை கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
உக்கடத்தைச் சேர்ந்த அச்சிறுமி வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால், அவரது பாட்டி உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்புகாரின் பேரில் போலீசார் சிறுமியை தேடி வந்த நிலையில், நேற்று(பிப்.17) வீடு திரும்பியதாக தெரிகிறது. இதையடுத்து, சிறுமியிடம் விசாரணை நடத்தியதில், கல்லூரி மாணவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, நடவடிக்கை மேற்கொண்ட போலீசார் குனியமுத்தூரில் தங்கி இருந்த 7 தனியார் கல்லூரி மாணவர்களை செவ்வாயன்று, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர்.