districts

img

சூறைக்காற்று: ஆயிரக்கணக்கான வாழை சேதம்

நாமக்கல், அக்.22- குமராபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் வீசிய சூறாவளி காற்றால், ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சேதமடைந்தன. நாமக்கல் மாவட்டத்தில் குமார பாளையம், பள்ளிபாளையம் உள்ளிட்ட  பகுதிகளில், ஏராளமானோர் விவசாயப் பணிகளை மேற்கொண்டு வருகின்ற னர். சமய சங்கிலி கிராமத்தில் ஆயிரக் கணக்கான ஏக்கரில் வாழை பயிரிடப் பட்டு, கடந்த பல மாதங்களுக்கு மேலாக  விவசாயிகள் பராமரித்து வந்தனர். காவிரி ஆற்று நீரை நம்பி விவசாயப் பணிகள் நடைபெற்று வந்தன. தை மாத துவக்கத்தில் வாழை அறுவடை செய் யும் பணிகள் நடைபெற இருந்தது. இந் நிலையில், திங்களன்று அதிகாலை நேரத் தில் பள்ளிபாளையம், சீராம்பாளை யம், சமய சங்கிலி, அக்ரகாரம், செங் குட்டபாளையம், கரைமேடு, தொட்டி பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், பலத்த சூறாவளி காற்றுடன் விடிய விடிய மழை பெய்தது. மழை பெய்யும்  முன், வீசிய சூறாவளி காற்றால் ஆயிரக் கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன. இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவ சாயிகள் கூறுகையில், சூறாவளி காற் றால் ஆயிரக்கணக்கான வாழை மரங் கள் முறிந்து விழுந்தன. ஒவ்வொரு விவ சாயியும் கடன் பெற்று வாழை பயிர் செய்துள்ளோம். இன்னும் இரண்டு  மாதத்தில், அறுவடை செய்யப்பட விருந்த நிலையில், சூறாவளிக்காற் றால் முறிந்து விழுந்து சேதமடைந்தது பெரும் கவலையளிக்கிறது. இதனால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு விவசாயி களுக்கும் பல லட்சம் ரூபாய்க்கு மேல்  நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இயற்கை சீற் றத்தால் ஏற்பட்ட இந்த சேதத்திற்கு, தமி ழக அரசு உதவித்தொகை வழங்க வேண் டும், என்றனர். பள்ளிபாளையம் வட்டா ரத்தில் மட்டும் நேந்திரன், கதலி, தேன்  வாழை உள்ளிட்ட ரகங்கள் 700 ஏக்க ருக்கும் அதிகமான பரப்பளவில் பயிரி டப்பட்டுள்ளன. இவை பெரும்பாலும் கேரள, கர்நாடகா, மும்பை மாநிலத்திற் கும், குறைந்த அளவில் உள்ளூரிலும் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து, சேதம் குறித்து வேளாண் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.