சிதம்பரம், டிச.7- சிதம்பரம் தெற்கு வீதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீனிவாசர் தெற்கு வீதி தெருவோரத்தில் தள்ளுவண்டியில் வடை சுட்டு வியாபாரம் செய்து வந்துள்ளார்.
அவர் சுடும் வாடையால் வாடிக்கை யாளர் கூட்டம் காத்திருந்து வடை வாங்கிச் சென்றுள்ளார்.
அப்போது சிறுகடையாக தெற்கு வீதியில் ஆரம்பிக்கப்பட்டது. இன்று சண்முக விலாஸ் என்ற பெயரில் ஸ்வீட் மற்றும் பேக்கரி வகைகள் விற்பனை செய்யும் பெரிய நிறுவனமாக வளர்ந்துள்ளது. இந்த கடையை நிறுவிய ஸ்ரீ நினிவாசர் 6 ஆண்டுகளுக்கு முன்பு டிசம்பர் 4-ந்தேதி காலமானார்.
அந்தக் கடையை அவரது மகன் பொறியாளர் கணேஷ் தற்போது நிர்வகித்து வருகிறார். ஆண்டுதோறும் டிசம்பர் 2-வது சனிக்கிழமை, ஸ்ரீ நினிவாசர் நினைவை போற்றும் வகையில் வடை தினமாக அனுசரிக்கப்படுகிறது. பொதுமக்களுக்கு காலை முதல் மாலை வரை இலவசமாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வடையை வழங்கி வருகிறார்.
பார்சல் இல்லை. அதே இடத்தில் ஒருவர் எத்தனை வடை வேண்டுமானாலும் சாப்பிடலாம். மற்ற நாட்களில் இந்த வடை கடையில் ரூ 8-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் 6-ம் ஆண்டு நினைவு நாளில் சனிக்கிழமை அன்று கடையின் உரிமையாளர் கணேஷ் வடைகளை பொதுமக்களுக்கு வழங்கினார். இதனை சிதம்பரத்தில் உள்ள வணிகர் சங்கங்கள் மற்றும் வணிகர்கள், பொதுமக்கள் என அனைவரும் வரவேற்றனர்.