districts

img

சிதம்பரம் ரயில் நிலையத்தில் தரமற்ற பணிகள் நகரமன்ற துணைத் தலைவர் புகார்

சிதம்பரம், நவ.6- இந்திய ரயில்வே  அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 1,309 ரயில் நிலையங்களை நவீனப்படுத்தும் பணியை செய்து வருகிறது.   ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு காத்திருப்பு அறை, உணவகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும்  கிடைப்பதுதான் இந்த திட்டத்தின் நோக்கமாகும். இந்த திட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் திருச்சி ரயில்வே கோட்டத் திற்குட்பட்ட  சிதம்பரம் மற்றும் விருத்தாசலம் ரயில் நிலை யங்கள் நவீனப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.  

இதில் சிதம்பரம் ரயில் நிலையத்திற்கு ரூ.6 கோடி மதிப்பில் ரயில் நிலை யத்தை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மேம்படுத்தும் பணியில் ரயில் நிலைய கட்டிடம், பிரம்மாண்டமான நுழைவாயில், சாலை வசதிகள், வாகன நிறுத்தும் இடங்கள், நடைபாதை, சுலபமான வழிகள், நவீன கழிப்பறைகள், மாற்றுத்திறனாளிக்கான சாய்வு தள வழி,  பார்வையற்றோர் தொட்டு உணரும் வகையில் தொடு தளம்.  

நடைமேடைகளில் இருக்கை வசதிகள், குடிநீர், தங்கு மிடங்கள், எல்இடி விளக்குகள், வழிகாட்டி பலகைகள், பயண தக வல்களை துல்லியமாக அறிய எலக்ட்ரானிக் டிஸ்ப்ளே பலகை கள் உள்ளிட்டவைகள் அமைப்ப தற்கான திட்டங்கள் இதில் வகுக்கப்பட்டுள்ளது. ஆனால், சிதம்பரம் ரயில் நிலை யத்தில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இந்த பணிகள் மெத்தன மாகவும், மிகவும் தரமற்ற முறை யில் நடைபெறுவதாகவும் பயணி கள்  குற்றம் சாட்டினர். இதனையறிந்த  சிதம்பரம் நகர்மன்றத் துணைத் தலைவர் முத்துக்குமரன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் ரயில் நிலையத்தில் நடைபெறும் பணிகளை பார்வையிட்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் அவர்பேசுகையில், புதிதாக அமைக்கப்பட்ட நுழை வாயிலின் மேல் தளத்திலிருந்து மழைக்காலத்தில் தண்ணீர் கசிவு ஏற்பட்டு கீழே விழு கிறது. இதனால் நுழைவு வாயில் வழி யாக செல்லும் பயணிகள் மீது தண்ணீர் பட்டு அவர்களின் ஆடை கள் நனைந்து சேதமாகிறது. நடைமேடைகளில் உள்ள  கூறைகளிலிருந்து மழைநீர் அப்படியே நடை மேடையில் விழுகிறது.

இதனால் பயணிகள் மழை காலங்களில் நடைமேடையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் பல பணிகள் தரமற்ற முறையில் நடைபெற்று வருகிறது. பெண்கள் ஓய்வு அறையில் உள்ள ஜன்னல் கண்ணாடிகளில் கருப்பு கலர் ஸ்டிக்கர் ஒட்டாத தால் உடை மாற்றுவது வெளியே இருப்பவர்களுக்கு தெரியும் வகையில் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் ஓய்வு அறையில் பெண்கள் தூங்கும் போது ஜன்னல் வழியாக அவர்களின் உடை மைகள் திருடு போகும் நிலை உள்ளது. மேலும் அவர்களுக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகள் ஏற்படுவதற்கு முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் பயணிகள் ரயில்வே ஊழியர்களிடம் புகார் கூறியும் இதுவரை நட வடிக்கையும் எடுக்கவில்லை.

 எனவே சம்பந்தப்பட்ட ரயில்வே மண்டல பொதுமேலாளர், பாது காப்பு ஆணையர்  ரயில் நிலை யத்தை மேம்படுத்தப்படும் பணி களை ஆய்வு மேற்கொண்டு தர மற்ற பணிகள் குறித்து நட வடிக்கை எடுக்க வேண்டும்.  மேலும்  தரமான முறையில் பணி கள் நடப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார். பேட்டியின் போது சிஐடியு மாவட்ட நிர்வாகி சங்கமேஸ்வரன், சிஐடியு ஆட்டோ சங்க நிர்வாகி மாரியப்பன் உள்ளிட்ட கட்சியினர் உடனிருந்தனர்.