சிதம்பரம், ஜூலை 24- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணனின் சகோதரர் கே. ராதாகிருஷ்ணன் உடல் நலக் குறைவால் ஜூலை 10-ஆம் தேதி காலமானார். இந்நிலையில், அவரது படத் திறப்பு நிகழ்ச்சி சிதம்பரம் வடக்கு மெயின் ரோட்டில் புதன்கிழமை (ஜூலை 24) அன்று நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு சிதம்பரம் நகர்மன்றத் தலைவரும் திமுக நகரச் செயலாளருமான கே.ஆர். செந்தில் குமார் தலைமை தாங்கினார். கே. ராதாகிருஷ்ணன் படத்தை சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் திறந்து வைத்து புகழஞ்சலி செலுத்தினார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் கே.எஸ் அழகிரி, சிபிஐ மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், சிதம்பரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ கே.ஏ. பாண்டியன், மூமுக தலைவர் ஜி.எம். ஸ்ரீதர் வாண்டையார், மதிமுக பொருளாளர் செந்தில் அதிபன், சிபிஎம் எம்எல்ஏ நாகைமாலி, விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சாமி. நடராஜன், சிபிஎம் முன்னாள் எம்எல்ஏ ஆர். ராமமூர்த்தி, விசிக மாவட்ட முன்னாள் செயலாளர் செல்லப்பன், சிபிஎம் மாவட்டச் செயலாளர்கள் கோ. மாதவன் (கடலூர்), என். சுப்பிரமணியன் (விழுப்புரம்), வி. மாரிமுத்து (நாகை), சுந்தரமூர்த்தி (திருவாரூர்), சீனிவாசன் (மயிலாடுதுறை) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.