districts

img

சிதம்பரம் கோவில் நிலங்களை மீட்க ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சிதம்பரம், அக். 5- சிதம்பரம் நடராஜகர் கோவில் நிலங்களை மீட்க  கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடராஜர் கோயில் நிலம் யார் யாருக்கு விற்பனை செய்தார் கள்.  தற்போது அந்த நிலம் என்னவாக உள்ளது. யாரிடம் உள்ளது என்பது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். கோவில் நிலங்களை மீட்கக்கோரி தனிநபர் ஒருவ ரும் வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த வழக்கின் விசாரணை சனிக்கிழமையன்று (அக்.5) நடைபெற்றது. அப்போது, நடராஜர் கோயில் நிலங்களை மீட்க வேண்டும் என்று கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.