districts

img

சி.வி.சண்முகம் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.10 லட்சத்தில் மேசை, நாற்காலிகளை வழங்கினார்.

சிதம்பரத்தில் உள்ள அரசு உதவி பெறும் ஆறுமுக நாவலர் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.10 லட்சத்தில் மேசை, நாற்காலிகளை வழங்கினார். இதை, பள்ளியின் செயலாளர் அருள்மொழி செல்வனிடம் சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ. பாண்டியன் ஒப்படைத்தார். தலைமை ஆசிரியர் ராம்குமார் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.