சிதம்பரம், டிச.17- காட்டுமன்னார்கோவில், திருமுட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி களை பார்வையிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினர். கடலூர் மாவட்டம். காட்டுமன்னார்கோவில், அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் ஒரே நேரத்தில் 31 செ.மீட்டர் மழை பெய்ததால் வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 30 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்தது.
இதனை யொட்டி வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது. அணையின் பாதுகாப்பு கருதி வெள்ள வினாடிக்கு 18 ஆயிரம் கன அடி திறந்து விடப்பட்டதால் எதிர்பாராத விதமாக திரு முட்டம் காட்டுமன்னார் கோவில் வட்டங்களை சேர்ந்த பெரும்பாலான கிரா மங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியது.
அதில் 50 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட நெல் பயிர் நிலங்கள் மூழ்கியது. இதில் காட்டுமன்னார்கோவில் பகுதியில் ருத்ர சோலை, வீரநத்தம், கொளக்குடி, எள்ளேரி, சர்வராஜன் பேட்டை, சிறகிழந்தநல்லூர், திருநாரையூர், தவர்த்தாம் பட்டு, கூடுவெளி, சாவடி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராம பகுதியில் வெள்ளம் நீர் சூழ்ந்து பாதிக்கப்பட்டது. மழையால் பாதிக்கப் பட்ட கூடுவெளி, திரு நாரையூர், வீரநத்தம், குமராட்சி உள்ளிட்ட பகுதி களில் தண்ணீர் சூழ்ந்த வீடு களில் சிக்கிய பொதுமக்கள் சந்தித்த சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தேன்மொழி, பிரகாஷ், வாஞ்சிநாதன், குமராட்சி ஒன்றியச் செயலாளர் மனோகர் ஆறுதல் கூறி னர். வீரநத்தம் கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு பிஸ்கட் பாக்கெட் வழங்கி னர்.
அதைத்தொடர்ந்து, வேளாண் துறை அதிகாரி களிடம் நெற்கதிர் வரும் நேரத்தில் தொடர்ந்து 3 நாட்கள் தண்ணீரில் பயிர்கள் மூழ்கியதால் நெற்கதிர்கள் கருக்கையாக மாறிவிடும். எனவே, அனைத்து வயல்களையும் கணக்கெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். காட்டுமன்னார்குடி வட்டாட்சியரிடம் பொது மக்களுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். பின்னர் செய்தி யாளர்களை சந்தித்த சிபிஎம் மாவட்டச் செய லாளர் கோ. மாதவன், காட்டுமன்னார்கோவில், திருமுட்டம் வட்டங்களில் பெரும்பாலான இடங்க ளில் வெள்ள நீர் புகுந்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் வீடுகளில் வைத்திருந்த டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் தண்ணீரில் நனைந்து வீணாகி உள்ளன. நெற்கதிர் வரும் தருவாயில் வெள்ள நீரில் மூழ்கியதால் நெல்மணிகள் கருக்கையாக மாறிவிட்டது எனவே உடனடியாக அனைத்து வயல்களையும் கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட நெற்பயிர்க ளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம், குடிசை வீடு களுக்கு ரூ.25 ஆயிரம் கால்நடைகளுக்கும் நிவா ரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மழை வெள்ள பாதிப்பு குறித்து முழுமையாக கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்ட வருவாய் துறை யினர், மழையால் வீட்டின் சுவர் சாய்ந்த நிலையில் இருந்தால் கணக்கில் சேர்க்கவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் புகார் கூறுகின்றனர்.
எனவே, கூடுவெளி உள்ளிட்ட கிராம ங்களில் மழை மற்றும் காற்றால் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகள் கணக்கு எடுக்கவில்லை என பொது மக்கள் கூறுகிறார்கள். எனவே இதை கண்காணித்து பாதிக்கப்பட்ட அனை வருக்கும் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.