districts

img

சிதம்பரம் இந்திரா நகர் மக்களுக்கு நிவாரணம்...

வீராணம் ஏரியில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் சிதம்பரம் நகரத்திற்கு உட்பட்ட ரயிலடி இந்திரா நகர் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்துள்ளது.  இந்த பகுதி மக்கள் சமைக்ககூட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை அறிந்த நகர்மன்றத் துணைத் தலைவர் முத்துக்குமரன் ஏற்பாட்டில் ஆறுமுக நாவலர் அறக்கட்டளை மற்றும் ஆறுமுக நாவலர் அரசு உதவி பெறும் பள்ளியின் சார்பில் ஆசிரியர்கள் கோபி ராஜ், செந்தில்நாதன், முதுகலை ஆசிரியை சுமதி ஆகியோர் இடுப்பளவு தண்ணீரில் சென்று 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு உணவு வழங்கினர்.