புதுச்சேரி, மார்ச் 8- என்.ஆர்.காங்கிரஸ்,பாஜக கூட்டணி ஆட்சி செய்து வரும் புதுச்சேரியில் நாளுக்கு நாள் குற்றச் சம்பவங்கள் அதி கரித்து வருவதை கண்டித்து சனிக்கிழமையன்று (மார்ச் 8) இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் குடிமை பொருள் வழங்கல் துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும், புதுச்சேரியில் அதிகரித்து வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை தடுக்க வேண்டும், சட்ட ஒழுங்கை பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்க கோரி போராட்டம் நடைபெற்றது. வாலிபர் சங்கத்தின் புதுச்சேரி உழ வர்கரை இடை கமிட்டி தலைவர் ஜெய பிரகாஷ் தலைமை தலைமை தாங்கினார். சங்கத்தின் மத்தியக் குழு உறுப்பினர் ஆனந்த் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். மாநிலத் தலைவர் கௌசிகன், செயலாளர் சஞ்சய் சேகரன்,பொருளாளர் ரஞ்சித் குமார், மாணவர் சங்கச் செயலாளர் பிரவீன்குமார்,உழவர்கரை கமிட்டி செயலாளர் நிலவழகன் மற்றும் நிர்வாகிகள் சத்தியவேல், வினோத்குமார் உட்பட திரளான வாலிபர்கள் கலந்து கொண்டனர்.