சென்னை, மார்ச் 6 - மரம் விழுந்து உயிரிழந்த பெண்ணுக்கு நீதி கேட்டு திங்களன்று (மார்ச் 6) மாநக ராட்சி 9வது மண்டல அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி னர். சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் சூர்யா (40) நந்தனத்தில் பணியை முடித்துவிட்டு தேனாம்பேட்டை வி.என்.சாலை வழியாக ஆட்டோவில் சென்றார். அந்தச் சாலையில் உள்ள ஜெய் அப்பார்ட்மென்டில் கட்டுமான பணி நடை பெற்றுக் கொண்டிருந்தது. அங்கு மரத்தை சுற்றி பள்ளம் தோண்டி வைத்திருந்தனர். இதனால் அந்த மரம் பெயர்ந்து ஆட்டோ மீது விழுந்தது. இதில் சூர்யா உடல் நசுங்கி உயிரிழந்தார். அண்மையில் அண்ணாசாலையில் ஒரு பெண் கட்டுமானப்பணியின் மீது சுவர் இடிந்துவிழுந்து பலியானார். அதேபோன்று சூர்யாவும் உயிரிழந்துள் ளர். கட்டுமானப்பணிகளை கண்காணிக் காத மாநகராட்சி அதிகாரிகள், ஜெய் அப்பார்ட்மென்ட் உரிமையாளர், கட்டுமான ஒப்பந்ததாரர் ஆகியோர் மீது வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும், சூர்யாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், 50லட்சம் ரூபாய் நிவாரணமும் வழங்க வேண்டும், ஓட்டுநர் சேகரின் ஆட்டோவிற்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி திங்களன்று (மார்ச் 6) சென்னைய மாநகராட்சி 9வது மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மத்திய சென்னை மாவட்ட தலைவர் தி.சுரேந்திரன் போராட்டத்திற்கு தலைமை தாங்கினார். மாவட்டச் செய லாளர்கள் எஸ். மனோன்மணி (மத்திய சென்னை), எம்.குமார் (தென்சென்னை), மாதர் சங்க மாவட்டச் செயலாளர் வெ.தன லஷ்மி, மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் எம்.சரஸ்வதி, ஏ.பிரியதர்ஷினி, ஆட்டோ சங்க மாவட்ட பொதுச்செயலாளர் எஸ்.பாலசுப்பிரமணியம், சிஐடியு மத்திய சென்னை மாவட்ட துணை தலைவர் எஸ்.கே.முருகேஷ் உள்ளிட்டோர் பேசினர்.