districts

img

நொச்சிக்குப்பம் குடியிருப்பு பிரச்சனையை சட்டமன்றத்தில் எழுப்புவோம்: எம்.சின்னதுரை

சென்னை, ஏப். 19 - நொச்சிக்குப்பம் மக்களின் குடியிருப்பு பிரச் சனை குறித்து சட்டமன்றத் தில் மார்க்சிஸ்ட் கட்சி எழுப்பும் என்று சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை கூறினார். சுனாமியால் பாதிக்கப் பட்ட மற்றும் நொச்சிக் குப்பத்தில் விரிவடைந்த குடும்பங்களுக்காக கட்டப் பட்டு வரும் 1188 புதிய  குடியிருப்புகளை நொச்சிக் குப்பம் மீனவமக்களுக்கே வழங்க வலியுறுத்தி இரண்டா வது நாளாக செவ்வாயன் றும் (ஏப்.19) உண்ணாநிலை போராட்டம் தொடர்ந்து நடை பெற்றது. இந்தப்போராட்டத்தில்,  சுனாமியால் பாதிக்கப்பட்டு இதுவரை வீடு கிடைக்காத 216 குடும்பங்களுக்கு கட்டி முடிக்கப்பட்ட வீடுகளில் உடனடியாக ஒதுக்கீடு வழங்க வேண்டும்,  வாரி யத்திற்கு செலுத்த வேண் டிய பயனாளி பங்குத் தொகை ரூ.1.30 லட்சத்தி லிருந்து ரூ. 5.5 லட்சமாக  உயர்த்தி இருப்பதை திரும்ப பெற வேண்டும் என்றும் போராட்டத்தில் வலி யுறுத்தி வருகின்றனர். முதலமைச்சரின் கவ னத்தை ஈர்க்கும் வகையில்  நடைபெறும் இந்த காலவரை யற்ற உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனையொட்டி போராட்டத்தை ஆதரித்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சியின் கந்தர்வ கோட்டை சட்டமன்ற உறுப்பி னர் எம்.சின்னதுரை, “இந்தப்  பிரச்சனை குறித்து சட்ட மன்றத்தில் வாய்ப்பு கிடைக் கும்போது பேசுவதாகவும் அல்லது கவன ஈர்ப்பு தீர்மா னம் கொண்டு வந்து பேசுவ தாகவும் உறுதி அளித்தனார். இந்நிகழ்வின்போது கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மயிலாப்பூர் பகுதிச் செயலாளர் ஐ.ஆர். ரவி, மாவட்டக்குழு உறுப்பி னர் எஸ்.ஜெயசங்கரன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.