districts

நிலுவைத் தொகையுடன் ஊதிய உயர்வு 9 மண்டலங்களில் மின் ஊழியர்கள் போராட்டம்

சென்னை, ஜூன் 7 - ஊதிய உயர்வை நிலுவைத் தொகை யுடன் வழங்கக் கோரி செவ்வாயன்று (ஜூன் 7) தமிழகம் முழுவதும் 9 மண்டலங்களில் மின்  ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பறிக்கப்பட்ட சலுகைகளை வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப  வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் இந்தப் போராட்டம் நடை பெற்றது. இதன் ஒருபகுதியாக சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. போராட்டத்திற்கு கணக்கீட்டாளர் மற்றும் களத்தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சந்திரசேகரன் தலைமை  தாங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய  தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின்  பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன், “மின்வாரியத்தில் 52 ஆயிரம் காலிப்பணி யிடங்கள் உள்ளன. இவர்களது பணிகளை யும் தற்போது பணியில் உள்ள தொழிலாளர் களே கூடுதலாக சேர்த்து செய்து வருகின்ற னர். இந்நிலையில், தொழிலாளர்கள் பெற்று வந்த அகவிலைப்படி உள்ளிட்ட 23 சலுகைகளை வாரியம் பறித்துள்ளது. 3ஆண்டுகளாக சரண்டர் விடுப்பையும் நிறுத்தி வைத்துள்ளது. 1.1.2022 முதல் வழங்க  வேண்டிய 3 விழுக்காடு அகவிலைப் படியை யும் நிறுத்தி வைத்துள்ளது.

1.9.2019 முதல்  ஊதிய உயர்வை வழங்க அமைக்கப்பட்ட குழு, ஒருமுறை கூட தொழிற்சங்கங்களுடன் பேசாமல் உள்ளது. இதனால் தொழிலா ளர்கள் அதிருப்தியில் உள்ளனர். எனவே,  உடனடியாக ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த் தையை தொடங்க வேண்டும். பறிக்கப்பட் டுள்ள சலுகைகளை விரைந்து வழங்க வேண்டும்” என்றார். “ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்த விலையை விட  கூடுதல் விலைக்கு தனி யாரிடம்மின்சாரத்தை கொள்முதல் செய்யப் படுகிறது. மின்வாரியத்தின் மொத்த செலவில்  75.7 விழுக்காடு மின்சார கொள்முத லுக்கே செலவிடப்படுகிறது. 14.42 விழுக்காடு மட்டுமே ஊழியர்களுக்காக செலவிடப்படு கிறது. எனவே, வாரியத்தின் நட்டத்திற்கு அரசின் நடவடிக்கைகள்தான் காரணம். அரசுக்கு சொந்தமான மின்உற்பத்தி நிலை யங்களில் முழுமையாக உற்பத்தி செய்தாலே  தனியார் கொள்முதலை கணிசமாக குறைக்க  முடியும். எனவே, நீண்டகால ஒப்பந்தங் களை மறு பரிசீலனை செய்ய வேண்டும்” என்றும் அவர் கூறினார்.