districts

img

விஜயசாரதியின் உடல், கண்தானம் சாதி, மதம் கடந்து மனித நேயத்தை பிரதிபலிக்கிறது

திருவள்ளூர், ஜன.11- தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாநில செயலாளர் பி.துளசி நாராயணன் இளைய சகோத ரர் விஜயசாரதி கடந்த டிச.30 அன்று காலமானார். விஜயசாரதியின் இரண்டு கண்களும்  தானம் செய்யப்பட்டது. மேலும் மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்காக  சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது  மருத்துவமனைக்கு உடலை யும் குடும்பத்தினர் தானம் செய்தனர். இந்த நிலையில் கும்மிடி ப்பூண்டி வசந்த பஜாரில் உள்ள தோழர் அய்யலு இல்லத்தில் ஞாயிறன்று (ஜன 11), விஜயசாரதி படத் திறப்பு நிகழ்வு நடை பெற்றது. மறைந்த விஜயசாரதி உருவ படத்தை துளசிநாரா யணன் மாமா சேஷாத்திரி திறந்து வைத்தார். இதில் கும்மிடிப்பூண்டி சட்ட மன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜ், சட்ட மன்ற முன்னாள் உறுப்பி னர்கள் கே.எஸ்.விஜயகு மார், சி.எச்.சேகர், சிபிஎம்  மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், திருவள்ளூர் நகர்  மன்ற முன்னாள் தலை வர் ப.சுந்தரராசன், தென் சென்னை மாவட்ட செயற் குழு உறுப்பினர் அ.பாக்கி யம்,  பேராசிரியர் கனகராஜ், திரைப்பட இயக்குநர் லெனின் பாரதி, பேராசிரியர்  விஜயராகவன், பத்திரிகை யாளர் சுதாகர், கிராம பெரிய வர்கள் டி.கே.மாரிமுத்து, செல்வராஜ் உள்ளிட்டு பலர் புகழஞ்சலி செலுத்தினர். செந்தமிழ்ச் சோலையின்  இரங்கல்பா. மறைந்த விஜயசார தியை  நினைவு கூறும் வகை யில், செந்தமிழ்ச் சோலை சார்பில் நிறுவனர் வ.விசய ரங்கன், தலைவர் ம.கிருட்டி ணமூர்த்தி, செயலாளர் ந.ரங்கபாஷ்யம் சார்பில் போராசிரியர் விசயரங்கன் எழுதிய கவிதை அடங்கிய படத்தை வழங்கினர். இதனை விஜயசாரதி மூத்த சகோதரர் பி.ஜெயநாரா யணன் பெற்றுக் கொண்டார். இந்த கவிதையை துணைத் தலைவர் சி.சுரேஷ் புகழஞ் சலி கூட்டத்தில்  வாசித்தார்.