districts

img

வீராணம் ஏரி நிரம்பியது பாசனத்திற்கு விரைவில் தண்ணீர் திறப்பு

கடலூர், ஆக. 24- வீராணம் ஏரி நிரம்பியதையடுத்து  விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஏரியில் இருந்து விவசாயத்துக்கு  விரைவில் தண்ணீர் திறக்கப்படும் என  அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்  கோவில் அருகே உள்ள லால்பேட்டை யில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரி யின் மொத்த கொள்ளளவு 47.50 அடி  ஆகும். இந்த ஏரியால் சுமார் 44,856 ஏக்கர் விவசாயநிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை நகர  மக்களுக்கு தாகத்தை தீர்ப்பதில் வீரா ணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது.  கீழ்அணையில் இருந்து வீராணம்  ஏரிக்கு கடந்த மாதம் முதல் வாரத்தில்  தண்ணீர் திறந்துவிடப்பட்டது. ஆரம்பத்தில் குறைவான தண்ணீரே  வீராணம் ஏரிக்கு வந்து கொண்டி ருந்தது. தற்போது மேட்டூர் அணையி லிருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து  விடப்பட்டுள்ளது.

எனவே கீழ ணைக்கு கூடுதலாக தண்ணீர் வர தொடங்கியது. இதன் மூலம் வீராணம்  ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.  இதனால் ஏரியின் நீர்மட்டம் வேகமாக  உயர்ந்தது. நேற்று 1,506 கனஅடி நீர்  ஏரிக்கு வந்தது. செவ்வாயன்று (ஆக.24) வீரா ணம் ஏரிக்கு வினாடிக்கு  1,652 கன அடி  நீர் வந்து கொண்டிருந்தது. ஏரியின் நீர்  மட்டம் திங்களன்று  46.80 அடியாக இருந்தது.  செவ்வாயன்று ஏரியின் முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டி வீராணம் ஏரி நிரம்பியது. ஏரி யில் இருந்து சென்னை குடிநீருக்கு திங்களன்று 48 கனஅடி நீர் அனுப்பி வைக்கப்பட்டது. செவ்வாயன்று 52 கன அடிநீர் சென்னை குடிநீருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வீராணம் ஏரியில் இருந்து வி.என்.எஸ். மதகு வழியாக சேத்தியாத்  தோப்பு அணைக்கு 500 கனஅடி நீர்  வெளியேற்றப்படுகிறது. வீராணம் ஏரி நிரம்பியதையடுத்து விவசாயி களின் கோரிக்கையை ஏற்று ஏரியில்  இருந்து விவசாயத்துக்கு விரைவில்  தண்ணீர் திறக்கப்படும் என அதி காரி ஒருவர் தெரிவித்தார். வீராணம் ஏரி நிரம்பியதை அடுத்து  அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் விவசாய பணியில் மும்முரமாக ஈடு பட்டுள்ளனர்.