districts

img

கீழணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

சிதம்பரம், ஆக. 30- கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, நாகை மாவட்டங்க ளுக்கு பாசனத்திற்கு கீழ ணையிலிருந்து தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி ஞாயிற் றுக்கிழமை  நடைபெற்றது. தமிழக வேளாண்துறை மற்றும் தொழிலாளர்துறை அமைச்சர் பங்கேற்று தண்  ணீரை திறந்து வைத்து பேசி னர். மேட்டூர் அணையில் ஜூன் 12ஆம் தேதி பாசனத்  திற்காக தண்ணீர் திறக்கப்  பட்ட தண்ணீர் கல்லணைக்கு  வந்தடைந்து. கல்லணையி லிருந்து 16ஆம் தேதி திறக்  கப்பட்ட தண்ணீர் ஜூன் 24ஆம் தேதி கீழணையை வந்தடைந்தது.  அணையில் தேக்கப்பட்ட தண்ணீர் கீழணை மற்றும் வீராணம்  ஏரியின் பாசன விவசாயி களின் வேண்டுகோளுக்கி ணங்கி கடலூர், தஞ்சாகூர் மற்றும் மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டத்  திற்கு சம்பா சாகுபடிக்காக விகிதாச்சார அடிப்படையில் வடவாறு வாய்க்காலில் வினாடிக்கு 600 கனஅடி. வடக்கு ராஜன் வாய்க்காலில் 400 கனஅடி, தெற்கு ராஜன் வாய்க்காலில் 400 கன அடி,  வீராணம் ராதா மதகு வாய்கா லில் 10 கன அடி, வீராணம் புதிய மதகு மூலம் 74 கனஅடி  உள்ளிட்ட சிறு சிறு வாய்க்கா லில் தேவைக்கேற்ப தண் ணீர் திறந்து விடப்பட்டது.

இதையடுத்து அமைச் சர் பன்னீர்செல்வம் செய்தி யாளர்களிடம் பேசுகையில், தஞ்சாவூர், மயிலாடுதுறை நாகை   மாவட்டங்களில் உள்ள கொள்ளிடம் தெற்கு ராஜன் வாய்க்கால், குமிக்கி மண்ணியார், விநாயகர் தெரு வாய்க்கால் வாயிலாக நேரடிப் பாசனமாகவும் மொத்தம் 1,31,903 ஏக்கர் விளை நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கப்படும் வகையில் தண்ணீர் திறக்கப்  பட்டுள்ளது. பாசன வசதிக்கு  ஏற்ப தண்ணீர் அளவு அவ்  வப்போது மாற்றி அமைக் கப்பட்டு வாய்க்காலில் தொடர்ந்து தண்ணீர் வழங்  கப்படும்.  தண்ணீர் இருப்பு  மற்றும் மழைநீர் அளவுக்கு  ஏற்ப தண்ணீர் வழங்கப்படும். தண்ணீர் திறப்பதற்கு முன்  வாய்க்கால்கள் தூர்வாரப் பட்டு விவசாயிகளின் ஆலோ சனையைப் பெற்று பாச னத்திற்கு தண்ணீர் திறக்கப் பட்டுள்ளது என்றார். நிகழ்ச்சியில்  தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ்  பொன்ராஜ் ஆலிவர், மயி லாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், சட்டமன்ற உறுப்பினர்கள் கடலூர் ஐயப்பன், காட்டு மன்னார்கோவில் சிந்த னைச்செல்வன், ஜெயங் கொண்டம் தொகுதி கண் ணன், சீர்காழி தொகுதி பன்னீர்செல்வம், விவசாய சங்கத் தலைவர்கள் இளங்கீரன், ரவீந்திரன், பாலு  ரங்கநாயகி உள்ளிட்ட பலர்  கலந்துகொண்டனர்.