திருவள்ளூர், மே 28- திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றி யத்தில் 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்க ளுக்கு கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான முகாம் நடைபெற்றது. கோட்டைக்குப்பம் ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் சம்பத் தலைமையில் நடை பெற்றது. இதில் பொன்னேரி வட்டாட்சியர் மணிகண்டன், மீஞ்சூர் வட்டார வளர்ச்சி ஆணையர் வேதநாயகம் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகையில், 18 வயதுக்கு மேற் பட்ட இளைஞர்களும், பெண்களும் ஆர்வத்து டன் வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். தடுப்பூசி தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் அவதூறு செய்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர். மேலும் நோய்த் தொற்றில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம் என்றும் அறிவுறுத்தி னர். இதில் பழவேற்காடு மீனவ கூட்டுறவு சங்கத் தலைவர் நாராயணன், திருப்பாலை வனம் வருவாய் ஆய்வாளர் நடராஜன், கிராம நிர்வாக அலுவலர் திருநாவுக்கரசு, மீஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவ லர் ஷானி விஸ்வநாத், சுகாதார ஆய்வாளர் வீரராஜன், செவிலியர் சாருலதா, சுகாதார பணியாளர்கள் பெனிட்டா, இளையராசன், பிரபு கிராம நிர்வாக உதவியாளர் பாபு ஆகி யோர் கலந்து கொண்டனர்.