செங்கல்பட்டு, ஆக. 4- சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள ஓட்டல் ஊழியர்களுக்கு கொரோனா தடுப் பூசி செலுத்தும் முகாமை காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் ஓட்டல் மேலாண்மை நிறு வனத்தில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஏ.ஆர்.ராகுல்நாத் தொடங்கி வைத்தார். பொதுமக்களிடையே அதிக தொடர்பு டைய ஓட்டல் தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமை மாவட்ட நிர்வாகத்தின் துணையுடன் தென்னிந்திய ஓட்டல் மற்றும் ரெஸ்டாரன்ட் சங்கம் ஏற்பாடு செய்திருந்து. முகாமை தொடங்கிவைத்து ஆட்சியர் பேசு கையில், ஓட்டலுக்கு உணவு உண்ண செல் பவர்கள் சாப்பிடும்போது முககவசம் பயன் படுத்த முடியாது. அதனால் ஓட்டலில் உள்ள மற்றவர்களுக்கும் ஓட்டல் ஊழியர்களுக்கும் நோய்தொற்று பரவும்நிலை ஏற்படும். எனவே அதைதடுக்க மாவட்டத்தில் உள்ள ஓட்டல் ஊழியர்களுக்கு பயன்படும் வகையில் இந்த தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது என்றார். முகாமில் 200 பேருக்கு தடுப்பூசி செலுத்தப் பட்டது. இதில் தென்னிந்திய ஓட்டல் மற்றும் ரெஸ்டாரன்ட் சங்கத்தின் இயக்குனர் சுந்தரம் சிங்காரம் மற்றும் பிரியாமோகன், இந்திய உணவு பாதுகாப்பு ஆணைய கோட்ட அலுவலர் டாக்டர் அனுராதா ஆகியோர் கலந்து கொண்ட னர். எஸ்ஆர்எம் ஓட்டல் மேலாண்மை நிறு வனத்தின் இயக்குனர் முனைவர் அந்தோனி அசோக்குமார் நன்றி கூறினார்.