ராணிப்பேட்டை, பிப்.2– ஆற்காடு நகரில் ஆட்டோ தொழிலாளர்க ளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உடனடி யாக காவல்துறை நடவடிக்கை எடுக்கக் கோரி சனிக்கிழமையன்ற (பிப். 1) ராணிப்பேட்டை மாவட்ட ஆட்டோ தொழி லாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட தலை வர் பி. மணி தலைமையில் ஆற்காடு பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆற்காடு பைபாஸ் சந்திப்பு பகுதியில் சிஐடியு இணைப்பில் செயல்படக்கூடிய ராணிப்பேட்டை மாவட்ட ஆட்டோ தொழி லாளர் சங்கம் சுமார் 20 ஆண்டுகளாக போக்குவரத்துக்கு இடையூறின்றி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அதே பகுதியில் இந்து ஆட்டோ தொழி லாளர்கள் முன்னணி சங்கத்தினர் பெயர் பலகை வைத்துள்ளனர். சென்னை - வேலூர் தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள ரவுண்டானா பகுதியில் அவர்கள் ஆட்டோக்களை வரிசையாக நிறுத்தி போக்குவரத்திற்கு இடையூறாகவும், சிஐடியு ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருவது தொடர்பாக பல முறை புகார் மனுக்கள் அளித்தும் ஆற்காடு நகர காவல் நிலையம் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாத நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆட்டோ மீட்டர் கட்டணம் மாற்றி அமைக்க, அரசு செயலி உருவாக்க முத்தரப்பு கூட்டங்களை முறைப்படுத்த வேண்டும், ஆன்லைன் அபராதம் கைவிட வேண்டும். இருசக்கர வாகன டாக்ஸியை நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தலைவர்கள் பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆட்டோ சங்கம் மாநில துணை செயலாளர் எம். சந்திரசேகரன், கட்சியின் மாவட்ட செய லாளர் பி. ரகுபதி, சிஐடியு மாவட்டத் தலை வர் ஆர். வெங்கடேசன், பொருளாளர் என். ரமேஷ், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் கே.கே.வி. பாபு, பொருளாளர் கே. ரமேஷ், விவசாய சங்க மாவட்ட செயலாளர் எல்.சி. மணி, பொரு ளாளர் சி. ராதாகிருஷ்ணன், விதொச மாவட்ட தலைவர் டி. சந்திரன், ஆற்காடு செயலாளர் ஜி. மதியழகன், சிறுபான்மை நலக்குழு மாவட்ட பொறுப்பாளர் எஸ். செல்வம் மற்றும் ஆம்ஸ்ட்ராங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.