திருப்பூர், அக். 15 – தீபாவளி பண்டிகையை ஒட்டி மாநகரப் பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்களும், பேருந்து வசதிகளும், வாகன நிறுத்துமிட வச திகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் தெரிவித்துள்ளார். மேலும் அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் வரும் 18ஆம் தேதி முதல் தீபா வளி பண்டிகைக்கு பின்கண்டவாறு இயக் கப்பட இருப்பதாகவும் ஆட்சியர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். திருப்பூரில் தற்போது நடைமுறையில் உள்ளபடி, கோவில்வழி பேருந்து நிலை யத்தில் இருந்து பழனி, திண்டுக்கல், மதுரை, தேனி வழித்தடங்களிலும், தென் மாவட்டங்க ளுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். மாவட்ட ஆட்சியரக பேருந்து நிலையத்தில் இருந்து பொள்ளாச்சி, உடுமலை மற்றும் பல் லடம் வழி கோவை செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கரூர், திருச்சி உள்ளிட்ட கிழக்கு மாவட்டங்களுக்கும், சேலம், திருவண்ணா மலை உள்ளிட்ட வடக்கு மாவட்டங்கள் மற் றும் சென்னை பேருந்துகளும் இயக்கப்படும். அவிநாசி வழி கோவை), மேட்டுப்பாளையம், உதகை, சத்தி, ஈரோடு மற்றும் கோபி செல் லும் பேருந்துகளும் இங்கிருந்து இயக்கப் படும். திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து நகர பேருந்துகளும், 10 நிமிடத்திற்கு ஒரு பேருந்து என்ற வகையில் நகரப்பகுதிக் குள் சிறப்புப்பேருந்துகள் இயக்கப்படும்.
போக்குவரத்து வழித்தடங்கள்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக். 18 முதல் பின்கண்ட வழித்தடங்களில் போக்கு வரத்து இயக்கப்படும். கரூர் உள்ளிட்ட கிழக்கு மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் காசிபாளையம், கூலிபாளை யம் 4 ரோடு - வாவிபாளையம் - நெருப்பெரிச் சல் - பூலுவப்பட்டி 4 ரோடு வழியாக புதிய பேருந்து நிலையத்தை அடைந்து பயணி களை இறக்கி, ஏற்றிக் கொண்டும், அதே வழி யில் திரும்பிச் செல்லும். ஈரோடு, சேலம் பேருந்துகள் ஊத்துக்குளி சாலையில் இருந்து கூலிப்பாளையம் நால் ரோட்டை அடைந்து வலதுபுறம் திரும்பி வாவிப்பாளையம் நெருப்பெரிச்சல் ரிங் ரோடு வழியாக பூலுவப்பட்டியை சென்ற டைந்து பெருமாநல்லூர் சாலையில் இருந்து புதிய பேருந்து நிலையத்தை சென்றடை யும். அவினாசி வழியாக கோவை, மேட்டுப்பா ளையம், நீலகிரி,உள்ளிட்ட இடங்களிலி ருந்து வரும் பேருந்துகள் திருப்பூர் பழைய வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம், குமார் நகர் 60 அடி சாலையில் ஒருபுறம் ஓர மாக நிறுத்தி பயணிகளை இறக்கி, ஏற்றி அதே வழியில் திரும்பி செல்லும். ஊத்துக்குளி சாலையில் இருந்து வரும் வாகனங்கள் நீதிமன்ற சாலை வழியாக கும ரன் சாலைக்கு செல்லக்கூடாது. அந்த சாலை ஒருவழி பாதையாக செயல்படும். பல்லடம் சாலையில் இருந்து வரும் பேருந்துகள் அனைத்தும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள பேருந்து நிலையம் வந்த டைந்து பயணிகளை இறக்கி, ஏற்றி அதே வழியில் திரும்பி செல்லும். தாராபுரம் வழி யாக வரும் பேருந்துகள் அனைத்தும் கோவில்வழி பேருந்து நிலையம் வந்த டைந்து பயணிகளை இறக்கி, ஏற்றி அதே வழி யில் திரும்பி செல்லும்.
வாகனங்கள் நிறுத்தும் இடம்
திருப்பூர் மாநகர கொங்கு நகர் போக்குவ ரத்து சரகத்திற்கு உட்பட்ட குமரன் சாலை யில் வாகன போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு இரண்டு சக்கர வாக னங்களை பழைய நீதிமன்ற சாலையின் இரு புறத்திலும் (சிவா டெக்ஸ்டைல்ஸ் அருகில்), நான்கு சக்கர வாகனங்களை யுனிவர்செல் தியேட்டர் ரோட்டிலும் நிறுத்த வழிவகை செய் யப்பட்டுள்ளது. பழைய பேருந்து நிலையம், புது மார்க் கெட் வீதிக்கு வரும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை மங்கலம் சாலையில் ஒருபுறமாக நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. திருப்பூர் குமரன் சாலையில் போக்குவ ரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு தடுப் பாண்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் மற்றும் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், குற்றம் ஏதும் நடைபெறா மல் இருக்கும் பொருட்டு கண்காணிப்பு கோபு ரம் அமைத்து கண்காணித்தும், ஒலிபெருக்கி மூலம் அடிக்கடி ஒலிப்பரப்பு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் கூறியுள்ளார்.