சென்னை,ஜன.8- மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக மாம்பலம் பிரதான சாலையில், திங்கள் முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படு கிறது என்று போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கான சோதனை ஓட்டம் நன்கு செயல்பட்டதால், மெட்ரோ நிர்வாகம் கோரிய படி இந்த போக்கு வரத்து மாற்றங்கள் 9.01.2023 முதல் 7.04.2024 வரை மேலும் பதினைந்து மாதங்கள் நீட்டிக்கப்படுகிறது. மாம்பலம் பிரதான சாலையில் தியாக ராய கிராமணி சாலை சந்திப்பு முதல் ஹபிபுல்லா சாலை சந்திப்பு வரை போக்குவரத்து தடை செய்யப்படுகிறது. மாம்பலம் பிரதான சாலையிலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் பக்கம் செல்ல விரும்பும் இலகு ரக வாகனங்கள் தியாகராய கிராமணி சாலை சந்திப்பில் தடை செய்யப்பட்டு, மேற்கண்ட வாக னங்கள் தியாகராய சாலை, வடக்கு உஸ்மான் சாலை மற்றும் ஹபிபுல்லா சாலை வழியாகவும் செல்லலாம். மாம்பலம் பிரதான சாலையில் கோடம் பாக்கம் மேம்பாலம் பக்கத்தில் இருந்து தி.நகர் பக்கம் செல்ல விரும்பும் இலகு ரக வாகனங்கள், ஹபிபுல்லா சாலை சந்திப்பில் தடைசெய்யப்பட்டு, ஹபிபுல்லா சாலை வழியாகவும் செல்லலாம். மற்றும் வடக்கு உஸ்மான் சாலை வழியாகவும் செல்ல லாம் என்று கூறியுள்ளனர். மேற்படி வாகன ஓட்டுநர்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று காவல்துறை அறிவித்துள்ளது.