districts

சென்னை முக்கிய செய்திகள்

ரயில் என்ஜின் நடுவழியில் நின்றதால்  போக்குவரத்து பாதிப்பு

சென்னை, நவ. 12- கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் என்ஜின் நடு வழியில் நின்றதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்திற்கு செவ்வாய்க்கிழமை காலை வந்தது.  பயணிகளை இறக்கி விட்ட பின்  அந்த ரயிலின் என்ஜின் எண்ணூர் யார்டுக்கு கொருக்குப்பேட்டை ரயில் நிலையம் வழியாக கொண்டு செல் லப்பட்டது. அப்போது திடீரென டீசல் என்ஜினில் பழுது ஏற்பட்டு நின்றது. இதனால் அந்த வழித்தடத்தில் செல்லக்கூடிய மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊழியர்கள், அதி காரிகள் மாற்று என்ஜின் கொண்டு வந்து பழுத டைந்த என்ஜினை எண்ணூர் யார்டுக்கு கொண்டு சென்றனர். இதனால் அரை மணி நேரத்திற்கும் மேலாக அந்தப் பகுதியில் ரயில்கள் இயக்கப்படவில்லை. மேலும் ஒரு சில எக்ஸ்பிரஸ் ரயில்கள் காலதாமதமாக இயக்கப்பட்டது.

திருவொற்றியூர் தனியார் பள்ளியில்  இன்று முதல் 10, 12ஆம் வகுப்புகள்

சென்னை, நவ. 12- வாயு  கசிவால் பாதிக்கப்பட்ட சென்னை திருவொற்றியூர் தனியார் பள்ளியில் இன்று முதல் 10,11, 12ஆம் வகுப்புகள் செயல்படும் என்றும் மற்ற வகுப்புகள் படிப்படியாக தொடங்கப்படும் என்றும் வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.  வாயுக்கசிவு ஏற்பட்டதால் திருவொற்றியூர் தனியார் பள்ளி கடந்த 20 நாட்களாக மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து வருவாய் கோட்டாட்சியர் கூறியதாவது:  திருவொற்றியூர் தனியார் பள்ளியில் வாயுக்கசிவு ஏற்பட்டது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள்,  மற்றும் அவர்களின் பெற்றோர்களிடம் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் பள்ளியை படிப்படியாக திறக்க முடிவு செய்யப்பட்டது.

கடலூரில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி 

கடலூர்,நவ.12-  வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் சிறப்பு முகாம் வருகிற 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.  இதையொட்டி இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர் விழிப்பு ணர்வு பேரணி கடலூர் டவுன்ஹால் முன்பு நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி கொடிய சைத்து தொடங்கி வைத்தார்.  மாவட்ட வருவாய் அலு வலர் ராஜசேகரன், மாநகர ஆணையாளர் அனு, வரு வாய் கோட்டாட்சியர் அபி நயா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடலூர் டவுன்ஹால் முன்பு இருந்து தொடங்கிய பேரணியானது பாரதி சாலை, கடலூர்- நெல்லிக்குப்பம் சாலை வழியாக செம்மண்டலம் அரசு தொழிற் பயிற்சி நிலை யம் வரை சென்றது. இதில் தொழிற்பயிற்சி நிலைய மாணவ- மாணவிகள் பலர் கலந்து கொண்டு வாக்கா ளர் விழிப்புணர்வு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்றனர்.  இந்த பேரணியில் வட்டாட்சியர் பலராமன், தேர்தல் பிரிவு வட்டாட்சியர் சுரேஷ்குமார், மாவட்ட சமூக நல அலுவலர் சித்ரா, துணை காவல் கண்காணிப்பாளர் ரூபன் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மழை வெள்ளத்தை சமாளிக்க தயார் நிலையில் மாநகராட்சி  துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தகவல்

சென்னை,நவ.13- முதல்வரின் உத்தரவின்படி சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை  துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டா லின் ஆய்வு செய்தார். முன்னேச்சரிகை நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய நிலை குறித்து அதி காரிகளிடம் கேட்டறிந்தார். 1,194 மோட்டார் பம்புகள், 158 சூப்பர் சக்கர் இயந்திரங்கள், 524 ஜெட் ரோடிங் ( ஜெட் ராடிங்) இயந்திரங்களும் தயா ராக உள்ளன. இது அக்டோபர் மாதம் பெய்த மழைக்கு பயன்படுத்தி இருந்ததை விட 21 சதவிகிதம் அதிக மாக்கி இருக்கின்றோம். அதேபோல, முந்தைய அக்டோபர் மழை அனுப வத்தின் அடிப்படையில், கண்காணிப்பு அதிகாரிகளின் அறிக்கையின் அடிப் படையில், கூடுதல் மோட்டார்களை ஏற்பாடு செய்துள்ளோம். சென்னை மாநகராட்சி சார்பில், 329 நிவாரண மையங்கள் தயார் நிலையில் இருக்கின்றன. 120 உணவு தயாரிப்பு மையங்களும் தயார் நிலையில் உள்ளன. கடந்த அக்டோபர் மாதம்  98 ஆக இருந்தது, அதையும் உயர்த்தி யிருக்கின்றோம். சென்னையில் உள்ள  22 சுரங்கப்பாதைகளில், கணேசபுரம் சுரங்கப்பாதை தவிர, மற்ற 21 சுரங்கப் பாதைகளில் வழக்கமான போக்கு வரத்து போய்க் கொண்டிருக்கிறது. அதுவும், ரயில்வே மேம்பாலம் பணியை மேற்கொள்வதற்காக கணேச புரம் சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது. காலை 9:30 மணி வரை எந்த பகுதி யிலும் பெரிதாக தண்ணீர் தேங்க வில்லை. இருப்பினும் நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். சென்னை மாநகராட்சி ஆணையர், மாநகராட்சி குழுவினர், அமைச்சர்கள், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர், துணை மேயர் இப்படி அனைவரும் களத்தில் இருக்கின்றோம். மக்களின் இயல்பு வாழ்க்கையை உறுதிப்படுத்த அனைத்து விரைவான நடவடிக்கை களையும் கண்டிப்பாக எடுப்போம். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ் வளவு சீக்கிரம் கால்வாய்களில் தூர்வாரும் பணிகளை முடித்து விடுவோம். சென்னை மாநகராட்சியில் மொத்தம் 22,000 நபர்கள் பணியில்  இருக்கின்றனர். மழைநீர் சேகரிப் பிற்காகதான், மழைநீர் கட்டிடங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. அனைத்து கட்டிடங்களுக்கும் மழைநீர் சேகரிப் பதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அது உறுதிபடுத்தப்பட்டிருக்கிறது என்றும் துணை முதல்வர் கூறினார்.