சென்னை, பிப். 26- சென்னை எண்ணூர் அருகே உள்ள எர்ணாவூர் பகுதியில் தண்ட வாளத்தை கடந்து செல்லும் போது ரயிலில் அடிபட்டு உயிர் பலி ஏற்படு வதை தடுக்க அந்த பகுதியில் சுரங்க பாதை அமைத்து தரவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யைச் சேர்ந்த சென்னை மாநகராட்சி 4ஆவது வார்டு கவுன்சிலர் ஆர்.ஜெயராமன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து மக்களவை உறுப்பி னர் கலாநிதி வீராசாமியிடம் அவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதா வது: திருவொற்றியூர் மேற்கு பகுதி களான சத்தியமூர்த்தி நகர், சண்முக புரம், ராமநாதபுரம், எர்ணாவூர், முல்லைநகர், மகாலட்சுமி நகர் உள்ளிட்ட 25 நகர்களில் சுமார் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். எர்ணாவூர் பகுதியில் இருந்து சுடுகாட்டிற்கோ அல்லது எண்ணூர் கடற்கரை சாலை பகுதி யில் உள்ள கிராமங்களுக்கோ செல்ல வேண்டும் என்றால், சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் சென்று எர்ணாவூர் மேம்பாலத்தின் மீது ஏறி சுற்றிச் செல்ல வேண்டும். மேம்பாலத்தில், எப்போதும் கன்டெய்னர் லாரி போக்குவரத்து நெரிசல் இருப்ப தால் பொதுமக்கள் எளிதில் நடந்து செல்ல முடியாது. இதனால், எர்ணாவூர் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்கள் அந்த பகுதியில் ஆபத்தான முறையில் தண்ட வாளத்தை கடந்து சென்று வருகின்றனர்.
எர்ணாவூர் பகுதியில் வசிக்கும் யாராவது இறந்து விட்டால், அவர்களுக்கு இறுதிச் சடங்குகளை செய்ய சுடுகாடு செல்ல வேண்டு மானால் இறந்தவர்களின் உடலை எர்ணாவூர் பேருந்து நிலையம் வரை இறுதி ஊர்வல வண்டியில் கொண்டு சென்று, அங்கிருந்து உடலை தங்கள் தோளில் சுமந்தபடி ரயில்வே தண்டவாளத்தை கடந்து சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்று இறுதிச் சடங்குகளை செய்ய வேண்டி யுள்ளது. அந்த பகுதியில், நான்கு வழி ரயில்வே தண்டவாளத்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலை யத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை செல்லும் மின்சார ரயில்கள், ஆந்திரா நோக்கி செல்லும் விரைவு ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்கள் தினசரி 100 முறைகளுக்கு மேல் சென்று வருகின்றன. இதனால் ரயில் கள் கடந்து செல்லும் வரை இறந்த வரின் உடலை தங்கள் தோளில் சுமந்தபடி காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. சுனாமி குடியிருப்பு, இந்திரா காந்தி நகர், ஜே.ஜே.நகர், காசிக்கோ யில் குப்பம், டி.கே.பி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மார்க்கெட், அரசு மருத்துவமனைக்கு செல்ல வும், சென்னையின் பல பகுதிகளுக்கு செல்ல பேருந்து பிடிக்க அவசர அவசரமாக தண்டவாளத்தை கடந்து செல்லும் போது விபத்தில் சிக்க வேண்டியுள்ளது.
இந்த ஆண்டு மட்டும் 10க்கும் மேற்பட்டோர் தண்டவாளத்தை கடக்கும் போது ரயிலில் அடிபட்டு இறந்துள்ளனர். இதில் பள்ளி மாணவர்களும் அடங்குவர். எனவே, ஆயிரக்கணக்கான மக்களின் தேவையை மனதில் கொண்டு எர்ணாவூர் பேருந்து நிலை யம் அருகே பாதை வசதியுடன் கூடிய சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டும். விம்கோ ரயில் நிலையத் திலிருந்து எர்ணாவூர் பாலாஜி நகர் வரை ஐடிசி சுவர் ஓரம் மக்கள் போக்குவரத்துக்கு நடைபாதை அமைத்து கொடுக்க வேண்டும். வடசென்னை மக்களவை உறுப்பினராகிய தாங்கள் இந்த விவகாரத்தில் தலையிட்டு 50 ஆண்டுகளாக, சுடுகாட்டிற்கு செல்ல வழியில்லாமல் தவிக்கும் மக்களுக்கு சுரங்கப்பாதை அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.