சென்னை, ஜூன் 13 - கொடுங்கையூர் காவல் நிலை யத்தில் விசாரணைக் கைதி மரண மடைந்த சம்பவத்தில் தொடர்புடைய காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டக் குழு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர்ராஜன் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: கொடுங்கையூர் பி6 காவல் நிலையத் திற்கு ஜூன் 11ஆம் தேதி விசாரணைக் காக செங்குன்றம் அலமாதியை சேர்ந்த அப்பு (எ) ராஜசேகர் (33) என்பவர் அழைத்து வரப்பட்டுள்ளார். 12ஆம் தேதி மாலை 5 மணி அளவில் காவல் நிலை யத்தில் மர்மமான முறையில் இறந்துள் ளார். இது தொடர்பாக காவல் ஆய்வா ளர் உள்பட 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 11ஆம் தேதி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு மாறாக காவல்துறை காவலில் வைத்து சித்தரவதை செய்யப்பட்டதால் இந்த மரணம் நிகழ்ந்துள்ளது. எனவே, இறந்த ராஜசேகரின் மரணம் ஒரு திட்டமிட்ட படு கொலையாகும். எனவே, இறந்தவர் உடலை முறையாக பிரேத பரிசோதனை செய்து, இந்த வழக்கில் தொடர்புடைய காவ லர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். உயர்நீதிமன்ற நீதிபதி கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும். ராஜசேகர் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.