திருவள்ளூர், ஜூலை 27-
திருவள்ளூர் ரயில் நிலைய பயணிகளின் நீண்ட கால கோரிக்கைகளை ரயில்வே நிர்வாகம் நிறை வேற்றவேண்டும் என்று ரயில்வே சென்னை கோட்ட மேலாளரிடம் திருவள்ளூர் மாவட்ட ரயில் பயணிகள் சங்க கூட்டமைப்பு ஒருங் கிணைப்பாளர் பா.சுந்தர ராசன் மனு அளித்துள்ளார்.
மனுவின் முக்கிய அம்சங்கள் வருமாறு;
திருவள்ளூர் நகரம் மாவட்ட தலைநகரமாகும். நாள்தோறும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது 60 ரயில்கள் இந்த ரயில் நிலையத்தை கடந்து செல்கின்றன. இதில் 11 ரயில் கள் நின்று செல்கின்றன. ஆனால் கோவை, பிருந்தா வன், கோவை இன்டர் சிட்டி, லால்பாக், கச்சுகுடா, மும்பை லோக்மான்ய திலக் முனையம், வெஸ்ட் கோஸ்ட் , நீலகிரி, திருவனந் தபுரம் உள்ளிட்ட முக்கிய மான விரைவு ரயில்கள் திரு வள்ளூர் ரயில் நிலையத் தில் நின்று செல்லவேண் டும் என்ற பயணிகளின் நீண்டகால நியாயமான கோரிக்கை நிறைவேற்றப் படாமல் உள்ளது. எனவே இந்த கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டும்.
இதுகுறித்து 6 மாதத்திற்கு முன்பு மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், ரயில்வே அமைச்சரிடம் நேரில் மனு அளித்தார். எனவே இந்த கோரிக்கையின் முக்கியத் துவத்தை கருத்தில் கொள்ள வேண்டும்.
அதிர்ச்சி தகவல்
கடந்த 14ஆம் தேதி வெளியிடப்பட்ட புறநகர் மின்சார ரயில் அட்டவணை யில் சென்னை – திருவ ள்ளூர்- அரக்கோணம் மார்க்கத்தில் 8 ஜோடி ரயில் கள் ரத்து செய்யப்பட் டுள்ளன. சென்னை – கடற்கரை – வேளச்சேரி மார்க்கத்திலும் கடற்கரை- தாம்பரம் – செங்கல்பட்டு மார்க்கத்திலும் 9 ரயில்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. இந்திய ரயில்வே வரலாற் றில் முதல்முறையாக அதிக எண்ணிக்கையிலான ரயில்கள் ரத்து செய்யப் பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும். 15 நிமிடத் திற்கு ஒருமுறை திருவள்ளூ ருக்கும் 30 நிமிடத்திற்கு ஒரு முறை அரக்கோணத்திற்கும் புறநகர் மின்சார ரயில்களை இயக்கவேண்டும்,
சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணத்திற்கு நள்ளிரவு 1.20 மணிக்கு இயக்கப்பட்ட தொழிலா ளர்களுக்கான ரயில் சேவை ரயில்வே பயணி கள் சங்கத்துடன் கலந்து பேசாமல் ரத்து செய்யப் பட்டுள்ளது. இந்த ரயிலை மீண்டும் இயக்கவேண்டும், மும்பையை போன்று அதிக மக்கள் தொகை கொண்ட சென்னையில் 22 மணிநேரம் புறநகர் மின்சார ரயில்களை இயக்கவேண்டும் உள் ளிட்ட திருவள்ளூர் ரயில்வே நிலையத்தை பயன்படுத்தும் ரயில்பயணிகளின் நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.