ஊரக வளர்ச்சித்துறையில் நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் வியாழனன்று (செப்16) திருவள்ளூரில் கருப்பு பேட்ஜ் அணிந்து உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் அ.சந்தானம், செயலாளர் இரா.சத்தியமூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.மில்கிராஜாசிங், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் இரா.பாண்டுரங்கன். உட்பட பலர் கலந்து கொண்டனர்.