world

img

500வது நாளை நெருங்கும் போராட்டம்    

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசிக் கொண்டிருந்தபோது எழுந்தவுடன், ஆசிரியர் பணிக்கான நியமனத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கும் நான்கு பெண்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டினர். காவல்துறை உடனடியாக அவர்களைக் கைது செய்து அழைத்துச் சென்றது.

தனது அதிர்ச்சியைக் காட்டிக் கொள்ள விரும்பாத மம்தா பானர்ஜி, "நான் 17 ஆயிரம் புதிய வேலைகளைத் தர தயாராக இருக்கிறேன். ஆனால் நீதிமன்றம் தடை போட்டு விட்டது. அவர்களின் கட்டளைக்குக் கீழ்படிய வேண்டியவளாக இருக்கிறேன்" என்று சொன்னதோடு நிற்கவில்லை. "போய் பிகாஷ் பாபுவிடம் கேளுங்கள்" என்று அலறினார்.

மேற்கு வங்கத்தின் அசன்சோல் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில்தான் இந்த சம்பவம். ஆசிரியர்கள் நியமனத்தில் பெரும் ஊழல் நடந்தது. பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நீதிமன்ற கதவுகளைத் தட்டியது. கட்சியின் வழக்கறிஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான பிகாஷ் ரஞ்சன் பட்டாச்சார்யா களமிறங்கினார். ஊழல் புரையோடிப் போயிருப்பது தெரிய வந்தது. நீதிமன்றமும் முறைகேடு செய்து வேலையை பெற்றவர்களுக்கு நியமன ஆணை தரக்கூடாது என்று சொல்லிவிட்டது.    

வேலை தர வேண்டாம் என்று நீதிமன்றம் சொல்லவில்லை. அதைத்தான் வேலைக்குத் தகுதியாக இருப்பவர்கள் கேட்கிறார்கள். இன்று (ஜூலை 01) 474வது நாளாகப் போராட்டம் நடக்கிறது.  

கொல்கத்தாவில் உள்ள காந்தி சிலையின் அருகில் அமர்ந்து தங்கள் போராட்டத்தைத் தொடர்கிறார்கள்