articles

img

ம.பி.யை கிறிஸ்தவர்களுக்கு எதிரான சோதனைக் கூடமாக்கும் சங்-பரிவார்

ம.பி.யை கிறிஸ்தவர்களுக்கு எதிரான சோதனைக் கூடமாக்கும் சங்-பரிவார்

சீத்தாராம் யெச்சூரி நகர், (மதுரை), ஏப். 6- நாடு முழுமைக்குமான முஸ்லிம் கள் மீதான தாக்குதலுக்கு 2002-இல் குஜராத்தை எப்படி சோதனைக் கூடமாக மாற்றினார்களோ, அது போல கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலுக்கு மத்தியப் பிரதேசத்தை சோதனைக் கூடமாக சங் பரிவார் கும்பல் மாற்றியிருப்பதாக, மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியப் பிரதேச மாநிலச் செயலாளர் ஜஸ்விந்தர் சிங் தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் 24-ஆவது அகில இந்திய மாநாட்டில் பங்கேற்றுள்ள அவர் பேசும்போது, “மத்தியப் பிரதேசத்தில் சங்-பரிவார் கும்பலின் தாக்குதல் குறித்து குறிப்பிட்ட அவர், மாநிலத்தில் சங் பரிவார் தாக்குதலுக்கு முஸ் லிம்கள் பலியாகின்றனர். இப்போது சங்பரிவார் கும்பலால் பழங்குடி யினர் பகுதிகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் குறிவைக்கப்படு கின்றனர். பிரதமர் மோடி, ராமர் கோவி லை திறந்துவைத்த நாளில் மத்தி யப்பிரதேச மாநிலம் ஜபுவா மாவட் டத்தில் ஒரு கிறிஸ்தவ தேவாலயம் சங்பரிவார் கும்பலால் இடிக்கப் பட்டது. தேவலாயத்தின் சுவர்களில் ஜெய் ஸ்ரீராம் என்று எழுதினர். மற் றொரு தேவாலயத்தில் காவிக் கொடி ஏற்றப்பட்டது. ஜபல்பூரில் மலையாள கிறிஸ் தவ பாதிரியார்கள் மீது விஎச்பி குண் டர்கள் தாக்குதல் நடத்தினர். இது கடந்த சில ஆண்டுகளாக சிறு பான்மையினர் மீது நடத்தப்படும் அடக்குமுறையின் தொடர்ச்சியே. முன்னெப்போதும் இல்லாத வகையில் நர்மதா நதியில் கும்ப மேளாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு அதையொட்டி தேவாலயங்கள் திட்டமிட்டு தாக்கப்பட்டன.  அதற் காக முஸ்லிம்கள் மீது தாக்குதல் கள் இல்லை என்று அர்த்தம் இல்லை. அவர்கள் மீதும் திட்டமிட்டு தாக்குதல் நடக்கிறது. துரதிர்ஷ்ட வசமானது என்னவென்றால், இந்தத் தாக்குதல்களின் பின்ன ணியில் காவல்துறை உள்ளது. சமீபத்தில், இந்தூர் மாவட்டம் மோவ் நகரில் நடைபெற்ற ஊர்வ லத்தின் போது ஒரு மசூதி தாக்கப் பட்டது. தாக்கியவர்களின் பெயர்க ளோடு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தாலும், ‘அடையாளம் தெரியாத நபர்கள்’ என்றே முதல் தகவலறிக்கை பதிவு செய்யப் பட்டுள்ளது. அதே நேரத்தில் 13 முஸ்லிம் இளைஞர்கள் மீது, திட்ட மிட்டு பொய் வழக்கு பதிவு செய் யப்பட்டதோடு அவர்களின் வீடுகள் புல்டோசர் மூலம் இடித்துத் தள்ளப்பட்டன. சங்-பரிவார் கும்ப லின் தாக்குதலை மார்க்சிஸ்ட்